Zero-Click Attack | உடனே அப்டேட் செய்யுங்கள் ! Apple நிறுவனம் கொடுத்த அலர்ட்..!
தற்போது வெளியாகியுள்ள iOS 14.8 மூலம் iOS 15 பதிப்பு விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
Apple நிறுவனம் தற்போது தனது பயனாளர்களுக்கு புதிய சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். சமீபத்திய சோதனையின் அடிப்படையில் ஐஃபோன், ஐபேட், மேக், Apple வாட்ச் உள்ளிட்ட சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை டொரோன்டோ பல்கலைக்கழகத்தின் ‘சிட்டிசன் லேப்’ கண்டறிந்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எச்சரிக்கையுடன் கூடிய அவசர அப்டேட்டாக iOS 14.8 என்ற பதிப்பை Apple நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பை iphone பயனாளர்கள் உடனே பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Apple patches two in-the-wild 0-days: 1 in CoreGraphics (CVE-2021-30860) for iOS and 1 in WebKit (CVE-2021-30858)https://t.co/SeuMyxsxCU
— Maddie Stone (@maddiestone) September 13, 2021
அதாவது சந்தேகத்துக்குரிய எண்ணில் இருந்துவரும் ஒரு லிங்கினை பயனாளர்கள் கிளிக் செய்யாத போதிலும் , imessage மூலமாக ஹேக்கர்ஸ் உள்நுழைய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை ”zero click attack " என அழைக்கின்றனர். இவ்வகை தாக்குதல் பயனாளர்களின் ஐஃபோன் மற்றும் ஐபேடின் Core Graphics மற்றும் webkit-இல் இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த இணையக் கண்காணிப்பு நிறுவனமான என்எஸ்ஓ (NSO Group) குழு இந்த உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கியிருக்கலாம் எனவும் சிட்டிசன் லேப் நிறுவனம் கணித்துள்ளது. இது குறித்த தகவலை அறிந்தும் NSO நிறுவனம் அதை மறுக்கவில்லை. எனவே தற்போது வெளியாகியுள்ள iOS 14.8 அப்டேட்டானது, இதிலிருந்து உங்கள் ஐஃபோன் மற்றும் ஐபேடை பாதுகாக்கும் என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரைவில் iOS 15 அப்டேட் உறுதி!
Apple நிறுவனம் iOS 15 குறித்த அப்டேட்டை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தும் என செய்திகள் வெளியான நிலையில் , சைபர் அட்டாக்குக்கான iOS 14.8-ஐ அறிமுகப்படுத்தியிருப்பது ஐபோன் பயனாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிறப்பசங்களை iOS 15-இல் கொண்டுவந்துள்ளது Apple நிறுவனம், எனவே இந்த அப்டேட்டை பயனாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக சில ஐஃபோன் மாடல்களில் மட்டும் சில பயனாளர்களுக்கு iOS 15 பீட்டா வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும் iOS 15 அப்டேட் கிடைத்துவிடும் என Apple நிறுவனம் தனது ஈவெண்ட் ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. திட்டமிட்டப்படி இன்னும் ஒரு சில மாதங்களில் அனைவருக்கும் iOS 15 அப்டேட் கிடைத்துவிடும் என்பது iOS 14.8 அப்டேட் மற்றும் வருகிற 20-ஆம் தேதி iOS 15 அறிமுகம் உள்ளிட்டவை தெள்ள தெளிவாக காட்டுகிறது.