டெஸ்க்டாப் Mode.. இரண்டு பேர் போஸ்ட் செய்யும் ஜாய்ண்ட் ரோல்.. Instagram-இன் கலக்கல் புது அப்டேட்ஸ்
இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த வாரம் பல்வேறு புதிய சிறப்பம்சங்களைத் தங்கள் feed பகுதியிலும், `ரீல்ஸ்’ பகுதியிலும் வெளியிட்டு, பயனாளர்களை அசர வைக்கத் திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த வாரம் பல்வேறு புதிய சிறப்பம்சங்களைத் தங்கள் feed பகுதியிலும், டிக்டாக் நிறுவனத்திற்குப் போட்டியாக அறிமுகப்படுத்திய `ரீல்ஸ்’ பகுதியிலும் வெளியிட்டு, பயனாளர்களை அசர வைக்கத் திட்டமிட்டுள்ளது.
கணினியின் மூலம் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வசதியைப் பரிசோதித்து வருகிறது இன்ஸ்டாகிராம் நிறுவனம். இதன்மூலம், கணினியில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் பேஸ்புக் தளத்தைப் போல, இன்ஸ்டாகிராம் தளத்திலும் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிட முடியும். அக்டோபர் 21 வெளியிடப்பட்ட அப்டேட்களின் மூலம், உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்கள் இந்தப் புதிய அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தப் புதிய அம்சத்தின் மூலம், வர்த்தகம், மாடலிங் முதலானவற்றை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்துபவர்கள் ஃபோன் மட்டும் இல்லாமல், தங்கள் விலை உயர்ந்த கேமராக்களைப் பயன்படுத்தி எடுத்த ஃபோட்டோக்களையும் பதிவிட முடியும். மேலும், ஸ்மார்ட்ஃபோன்களின் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரை மையப்படுத்தியும் பல்வேறு புதிய அம்சங்களை இந்த அப்டேட்டில் வெளியிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`Collabs' என்ற புதிய பரிசோதனை முயற்சியின் மூலம் இரண்டு நபர்கள் இணைந்து போஸ்ட், ரீல்ஸ் ஆகியவற்றைப் பதிவிட முடியும். இதற்காகப் பயனாளர்கள் தங்கள் tagging ஆப்ஷனின் போது, பிறரை invite செய்தால் அவர்களுடன் இணைந்து போஸ்ட்களைப் பதிவிட முடியும்.
அவ்வாறு பதிவிட்ட இரு பயனாளர்களின் ஃபாலோவர்களும் அந்தப் போஸ்டைப் பார்வையிட முடியும். மேலும், அதனால் வியூஸ் அதிகமாகக் கூடலாம். லைக்ஸ், கமெண்ட்ஸ் ஆகியவற்றையும் பெறலாம். பெரிய சூப்பர்ஸ்டார்கள் முதல் ஸ்பான்சர் செய்யப்படும் விளம்பரங்கள் போஸ்ட்கள் வரை இந்தப் புதிய அம்சம் பயனுள்ளதாக அமையும். இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த சிறப்பம்சத்தைப் புதிது எனக் கூறினாலும், வெகு சில பயனாளர்கள் இதனைப் பயன்படுத்தி வந்ததை நாம் பார்க்க முடியும். கடந்த ஜூலை மாதமே வெகு சிலருக்கு மட்டும் இந்தச் சிறப்பம்சம் வழங்கப்பட்டது. வெளியிட்ட போது, சிலருக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட இந்த சிறப்பம்சம், உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு பரிசோதனை முயற்சியாக, பயனாளர்கள் லாபம் இல்லாத நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்காக new post button-ஐ பயன்படுத்தி, மக்களின் ஈகையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த சிறப்பம்சம் வெளியாகப் போவதாக, கணினி நிபுணர்கள் சிலர் கடந்த செப்டம்பர் மாதம் தகவல்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 21 முதல் இன்ஸ்டாகிராம் தளத்தின் ரீல்ஸ் பகுதியில் இசையுடன் கூடிய புதிய எஃபெக்ட்களைப் பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. Superbeat, Dynamic Lyrics என்ற இந்தப் புதிய சிறப்பம்சங்களின் மூலம், பயனாளர்கள் பல்வேறு புதிய ஸ்டைல்களில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.