Google Photos | கூகுள் ஃபோட்டோஸில் இருந்த ஃபோட்டோஸ், வீடியோஸ் போயிடுச்சா? இப்படி மீட்கலாம்..!
கூகுள் போட்டோஸ் இருந்து இழந்த புகைப்படங்களை மீட்டெடுக்க இந்த வழிகாட்டுதல்கள் உதவுகின்றன.
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் கூகுள் போட்டோஸ் தளத்தைத்தான் ஆன்லைன் காப்புப்பிரதியாக (backup) பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் இடப்படும் போட்டோஸ் முற்றிலும் பாதுகாப்பானவை மற்றும் உங்கள் போனில் இருந்து நிரந்தரமாக டெலிட் ஆகும் பிரச்சினை இதில் இல்லை. ஆனால் கூகுள் போட்டோஸிலிருந்து தற்செயலாக புகைப்படங்களை நீக்குவது போன்ற பிரச்சனைகள் நிறைய நடக்கிறது. எனவே கூகுள் போட்டோஸிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எளிதாகக் கொண்டு வர சில சிறப்பு வழிகளைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்
கூகுள் போட்டோஸிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை ஆண்டராய்டு பயனர்கள் மீட்டெடுக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்.
- நீக்கப்பட்ட புகைப்படங்களை மீண்டும் கொண்டு வர விரும்பினால், முதலில் உங்கள் தொலைபேசியில் Google போட்டோஸ் செயலியைத் திறக்கவும்.
- இங்கே நீங்கள் வலதுபுறத்தில் மூன்று கோடுகளைக் காணலாம். அதை கிளிக் செய்ய வேண்டும்.
- Trash அல்லது Bin விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தப் பிறகு, நீங்கள் மீண்டும் பெற விரும்பும் புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, ரீஸ்டோர் (Restore) பட்டனை கிளிக் செய்யவும்.
- இதைச் செய்த பிறகு, நீங்கள் நீக்கிய, உங்களுக்கு தேவை என நீங்கள் செலக்ட் செய்த அனைத்து புகைப்படங்களும் உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்.
கூகுள் போட்டோஸிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை ஐபோன் பயனர்கள் மீட்டெடுக்க பின்வரும் வழிகளைப் பின்பற்றுங்கள்
- முதலில், உங்கள் சாதனத்தில் Google போட்டோஸ் செயலியைத் திறக்கவும்.
- இங்கே நீங்கள் வலது பக்கத்தில் மூன்று கோடுகளைக் காணலாம். அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- கிளிக் செய்த பிறகு, Trash அல்லது Bin விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் திரும்பப்பெற விரும்பும் புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, Restore பட்டனை கிளிக் செய்க. நீங்கள் இழந்த போட்டோக்கள் மீண்டும் கிடைத்துவிடும்.
கூகுள் போட்டோஸிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை வலை பயனர்கள் மீட்டெடுப்பதற்கு வழி இதுதான்:
- பயனர்கள் முதலில் தங்கள் பிரௌசருக்கு சென்று https://photos.google.com/ என்ற கூகிள் புகைப்படங்களுக்கான லிங்கை திறக்க வேண்டும்.
- உங்கள் Google ID உடன் இங்கே உள்நுழைக. இதைச் செய்த பிறகு, நீங்கள் மூன்று கோடுகளை காணலாம். அதை கிளிக் செய்க.
- அவ்வாறு செய்த பிறகு, Trash எனும் ஆப்ஷனை கிளிக் செய்யவும், நீங்கள் இங்கு திரும்பப் பெற விரும்பும் படங்களைத் தேர்வு செய்யவும்.
- புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, Restore பட்டனைக் கிளிக் செய்க. இதற்குப் பிறகு, நீங்கள் தேர்ந்தெடுத்த எல்லா புகைப்படங்களும் உங்களுக்குக் கிடைத்துவிடும்.
முக்கியமாக நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல், கூகுள் போட்டோஸிலிருந்து நீக்கப்பட்ட போட்டோஸ் 60 நாட்கள் மட்டுமே Trash அல்லது Bin-இல் இருக்கும். நீக்கப்பட்ட போட்டோஸ் 60 நாட்களுக்கு மேலாகிவிட்டால், அவற்றை நீங்கள் மீட்டெடுக்க விரும்பினால், அது சாத்திமாவது கடினம். அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, தேவையான அனைத்து படங்களையும் வீடியோக்களையும் சரியான நேரத்தில் மீட்டெடுங்கள்.