UPI Payments | இன்டர்நெட் இல்லாமல் UPI சேவையை பயன்படுத்தலாம் ! எப்படி தெரியுமா?
பொதுவாக 2g அல்லது மொபைல் டேட்டா தீர்ந்துவிடும் சமயங்களில் யு.பி.ஐ சேவையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.
இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது “யுபிஐ” தொழில்நுட்பம். கூகுள் பே, போன் பே ,பேட்டியம் என இந்த தொழில்நுட்பம் கொண்ட பல செயலிகள் உள்ளன.நாட்டில் கிட்டத்த 10 சதவிகிதம் பேர் யு.பி.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது ஆய்வறிக்கை. பொதுவாக 2g அல்லது மொபைல் டேட்டா தீர்ந்துவிடும் சமயங்களில் யு.பி.ஐ சேவையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். ஏனெனில் யு.பி.ஐ பணபரிவர்த்தனையை இணைய வழி மூலம் செய்வதற்கு சரியான நெவொர்க் கனெக்ஷன் தேவைப்படுகிறது. இந்நிலையில் இணைய வசதிகள் இல்லாமல் , ஆஃப்லைன் மூலம் யு.பி.ஐ சேவையை பயன்படுத்தும் வகையில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NPCI (National Payments Corporation of India) இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. நீங்கள் USSD- அடிப்படையிலான *99# என்ற சேவை மூலம் ஆஃப்லைன் மொபைல் கட்டண சேவையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும் 50 பைசா பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
UPI ஆஃப்லைன் டிரான்ஸாக்ஷன் வழிமுறைகள்:
முதலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99# என்பதை டயல் செய்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு திரையில் ஒரு மெனு தோன்றும். அதில் Send Money, Receive Money, Check Balance, My Profile, Pending Requests, Transactions மற்றும் UPI PIN என்ற வசதிகள் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவதாக இருக்கும் Send money என்ற வசதியை தேர்வு செய்ய ‘1’ என டைப் செய்ய வேண்டு,
தற்போது திரையில் மொபைல் எண், UPI ID மற்றும் account number and IFSC code என்ற வசதிகள் தோன்றும் , இதில் எதை பதிவு செய்து பணம் அனுப்ப விருப்ப படுகிறீர்களோ அதற்கு நேராக கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணை பதிவு செய்து ஓக்கே கொடுத்துவிடுங்கள்.
பின்னர் தோன்றும் வசதியில் நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களின் மொபைல் எண், UPI ID மற்றும் account number and IFSC code ஒன்றை பதிவு செய்ய வேண்டும். முன்னதாக நீங்கள் தேர்வு செய்த சேவையும் , பணம் அனுப்ப விரும்பும் உங்கள் நண்பரின் சேவையும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் யு.பி.ஐ ஐடியை தேர்வு செய்தால் , உங்களின் நண்பரின் யு.பி.ஐ ஐடியை பதிவு செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் மொபைல் எண் கொடுத்திருந்தால் உங்கள் நண்பர் வங்கிக்கணக்குடன் இணைத்துள்ள மொபைல் எண்ணை குறிப்பிடுங்கள்
அதன் பிறகு தோன்றும் திரையில் எவ்வளவுபணம் செலுத்த விரும்புகிறீர்களோ அதனை பதிவு செய்யுங்கள். பின்னர் கடவுச்சொல்லை (password) கொடுத்து, ok கொடுத்தால் உங்கள் பணபரிவர்த்தனை வெற்றிகரமாக முடிவு பெற்றுவிடும்.
இதே போல உங்களின் பேலன்ஸை தெரிந்துக்கொள்ள, கடவுச்சொல்லை மாற்ற என பிற சேவைகளை அனுகவும் *99# வழிவகை செய்கிறது.