Masked Aadhaar Card: ஆதார் மோசடி : மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டை பயன்படுத்துவது எப்படி ?
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்ட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் UIDAI ஆதார் கார்டின் முழு எண்ணையும் எந்த நிறுவனத்திடமும் பகிர வேண்டாம். அதற்கு பதிலாக ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை பயன்படுத்தினால் போதுமானது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்ட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
#BewareOfFraudsters
— Aadhaar (@UIDAI) June 6, 2022
To download an e-Aadhaar please avoid using a public computer at an internet café/kiosk.
However, if you do, then it is highly recommended to delete all the downloaded copies of #eAadhaar. pic.twitter.com/Jdi2y1LsK8
எப்படி இருக்கும் மாஸ்க்ட் ஆதார் கார்ட்:
இந்த புதிய மாஸ்க் ஆதார் கார்ட் முதல் எட்டு இலக்கங்களை மறைத்து, கடைசி நான்கு இலக்கங்களைக் காட்டுவதன் மூலம் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது. மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் எண் என்பது ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களுக்குப் பதிலாக “xxxx-xxxx” போன்ற சில குறியீடுகளுடன் வரும்.டைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். இதனை பயன்படுத்தினால் பாதுகாப்பாக உங்களது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என UIDAI தெரிவித்துள்ளது.
#BewareOfFraudsters
— Aadhaar (@UIDAI) June 3, 2022
All 12-digit numbers are not #Aadhaar. It is recommended that the Aadhaar should be verified before accepting it as identity proof. Click: https://t.co/nMDmmFGSqR and verify it online in 2 simple steps. pic.twitter.com/aLu3EtWDzM
மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டினை UIDAI வலைத்தளம் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதற்கு கீழ்க்கண்ட படிநிலைகளை பின்பற்றினால் போதுமானது.
படி 1 : myaadhaar.uidai.gov.in க்குச் சென்று 'Login' வசதியை க்ளிக் செய்யவும்.
படி 2 : உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை கொடுத்த பிறகு , Send OTP என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3 : உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.அதனை பதிவு செய்து 'Login' வசதியுடன் உள்நுழைய வேண்டும்.
படி 4: அதன் பிறகு 'Services' என்ற வசதியிற்குள் சென்று 'Download Aadhaar' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 5 : Review your Demographics Data பிரிவின் கீழ் உள்ள 'Do you want a masked Aadhaar?' என்னும் வசதியை க்ளிக் செய்யுங்கள்.
படி 6 : தன் பிறகு "Download." என்னும் வசதியை பயன்படுத்தி , புதிய மாஸ்க்ட் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
படி 6 : PDF வடிவத்தில் உங்களது மாஸ்க்ட் ஆதார் கார்ட் கிடைத்துவிடும்.
படி 7 : உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களை (ஆதாரில் உள்ளதைப் போல) கேபிடல் எழுத்துக்களிலும், உங்கள் பிறந்த ஆண்டையும் YYYY வடிவத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட PDF மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கோப்பைத் திறக்கலாம்.