Bullet Proof Jacket: போர் பதற்றம், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் பாதுகாப்பானவையா? எந்த தோட்டா மிக ஆபத்தானது?
Bullet Proof Jacket: தோட்டா தாக்குதலிலிருந்து காப்பாற்றக் கூடிய புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை தயாரிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Bullet Proof Jacket: புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை எப்படி தோட்டாவை தடுக்கிறது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்:
ராணுவமோ, காவல்துறையோ அல்லது எந்த பாதுகாப்பு படையினரோ, எந்தவொரு முக்கியமான நடவடிக்கையிலும் ஈடுபடும்போது, அவர்கள் கண்டிப்பாக புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளைப் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இருப்பினும், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டால் அனைத்து வகையான துப்பாக்கிகளிலிருந்து வெளியாகும் தோட்டாக்களிடமிருந்து பாதுகாப்பை வழங்க முடியாது. புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டையும் ஊடுருவக்கூடிய தோட்டாக்களை கொண்ட துப்பாக்கிகளும் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அவை குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தயாரிப்பது எப்படி?
புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் டைனீமா அல்லது உயர் டெனியர் பாலிஎதிலின் போன்ற லேசான மற்றும் வலுவான இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது தவிர, சில புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் பீங்கான் அல்லது ஸ்டீல் தகடுகளும் இருக்கும். இந்த தட்டுகள் அதிக திறன் கொண்ட தோட்டாக்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. இந்த விஷயங்களில் இருந்து ஜாக்கெட் தயாரிக்கப்படும் போது, அது பயன்படுத்துவதற்கு முன் சோதிக்கப்படுகிறது. புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் பாதுகாப்புத் தரங்களைச் சந்திக்கிறதா என்பதை உறுதிப்படுத்த சோதனை செய்யப்படுகிறது.
எந்த தோட்டா புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை ஊடுருவும்?
புல்லட் ப்ரூஃப் ஆடைகளின் பாதுகாப்பு திறன் தேசிய தரநிலை NIJ மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், தரசோதனைகளுக்குப் பிறகும், இந்த ஜாக்கெட்டுகளில் ஊடுருவக்கூடிய சில தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்பாட்டில் இருக்கத் தான் செய்கின்றன. உயர் திறன் கொண்ட துப்பாக்கி தோட்டாக்கள் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டையே துளைக்கும் திறன் கொண்டுள்ளன. உதாரணமாக .308 வின்செஸ்டர் என்பது சிப்பாய்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான துப்பாக்கி காலிபர் ஆகும். அதன் புல்லட் மிகவும் ஆபத்தானது, அருகில் இருந்து தாக்கினால், அது புல்லட் புரூஃப் ஜாக்கெட்டை ஊடுருவிச் செல்லும். இது தவிர, AK-47 போன்ற தாக்குதல் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 7.62x39 mm தோட்டாவும், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளை ஊடுருவி காயத்தை ஏற்படுத்தும்.
.44 மேக்னம் தோட்டாக்களைப் பயன்படுத்தும் கைத்துப்பாக்கிகளும், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளை தகர்த்து தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர, .357 மேக்னம் மற்றும் .50 BMG தோட்டாக்களும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் ஊடுருவ முடியும். இருப்பினும், இந்த தோட்டாக்கள் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை ஊடுருவிச் செல்ல, புல்லட்டைச் சுடும் நபர் மிக அருகில் இருந்து சுட வேண்டும். தூரம் அதிகமாக இருந்தால், புல்லட் ப்ரூஃப் அணிந்த நபருக்கு இந்த தோட்டாக்கள் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது.