Samsung Phones: சாம்சங் போன் பயன்படுத்துறீங்களா? ஹேக்கர்ஸிடமிருந்து தப்புவது எப்படி? எச்சரிக்கும் மத்திய அரசு!
சாம்சங் மொபைலில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samsung Phones: சாம்சங் மொபைலில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொபைல் பயன்பாடு:
இந்த நவீன வாழ்க்கையில் எல்லாமே டிஜிட்டில் மயமாகிவிட்டது. வீட்டிற்கு தேவையான ஷாப்பிங் முதல் வாழ்க்கைக்கு தேவையான துணையை கண்டறிய டேட்டிங் வரை எல்லாமே நாம் மொபைல் மூலம் செய்து வருகிறோம். இதனால் நாம் அதிக நேரம் செல்போனை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது நம்முடைய வாழ்க்கை முறையை பெரியளவில் மாற்றிவிட்டது. ஆனால், இந்த மொபைலில் இருக்கும் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அதாவது, ஹேக் செய்தல், பண மோசடி போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே, தொழில்நுட்பத்தில் இருக்கும் ஆபத்துகள் குறித்து கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (CERT - IN) எச்சரிக்கை விடுத்து வருகிறது. தற்போது இந்த அமைப்பு சாம்சங் மொபைலில் இருக்கும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஐபோன்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், சாம்சங் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாம்சங் பயனாளர்களுக்கு எச்சரிக்கை:
அதாவது, சாம்சங் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 11,12,13,14 மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் சாதனங்களில் இந்த குறைபாடுகள் பல வகைகளில் ஆபத்தை விளைவிக்கும் என்று CERT-In அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு ஹேக்கர்களுக்கு பயனர்களின் முக்கிய தகவல்களை அபகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இவை ஆண்ட்ராய்டு 11, 12, 13, 14 ஓஎஸ் கொண்டிருக்கும் சாம்சங் சாதனனங்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ், கேலக்1 ஃப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்டு 5 மற்றும் பல்வேறு மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதன்படி, சாம்சங்கின் செக்யுரிட்டி அப்டேட்களை பயனர்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சாதனத்தில் அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ்-சாப்ட்வேர் அப்டேட்-டவுன்லோட் அன்ட் இன்ஸ்டால் என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
அப்டேட் வரும் வரை மொபைலை கவனமாக பயன்படுத்த வேண்டும். தெரியாத நபர்களிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம். தெரியாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அதேபோல, செல்போனில் இருக்கும் அனைத்து செயலிகளையும் அப்டேட் செய்யவும், புதிதாக எதாவது செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட், இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Corning: தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடியில் கொரில்லா க்ளாஸ் உற்பத்தி ஆலை - எங்கு தெரியுமா?