இனி கவலை இல்லை: மருந்துச் சீட்டை ட்ரான்ஸ்லேட் செய்யும் கூகுள்
கூகுள் நிறுவனம் ஒரு புதிய செயற்கை நுண்னறிவு மற்றும் மெஷின் லேர்னிங் மாடலை உருவாக்கியுள்ளது. அது மருத்துவர்கள் கைப்பட எழுதும் ப்ரிஸ்க்ரிப்ஷன்களை ட்ரான்ஸ்லேட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் மாடலை உருவாக்கியுள்ளது. அது மருத்துவர்கள் கைப்பட எழுதும் ப்ரிஸ்க்ரிப்ஷன்களை ட்ரான்ஸ்லேட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் AI இந்தியா என்ற நிகழ்வின் போது இந்த அம்சம் காட்சிப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு எனப்படுவது கணினி அறிவியலின் வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், அதாவது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு.
கடந்த காலத்தில் இருந்த இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் வரிசையில் அண்மைக்கால வரவுதான் இந்த செயற்கை நுண்ணறிவு. மனித உடல் உழைப்பை அபகரித்த இயந்திரங்கள், தற்போது கணினி நுட்பத்தின் உதவியுடன் மனித மூளையின் உழைப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. கைபேசி முதல் தானியங்கிப் போக்குவரத்துவரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நுகரத் தொடங்கியிருக்கிறோம்.
அதன் பரிணாம வளர்ச்சி தான் மருத்துவர்களின் ப்ரிஸ்க்ரிப்ஷனை எவ்வளவு மோசமான கையெழுத்தில் இருந்தாலும் அதனை ட்ரான்ஸ்லேட் செய்து கொடுக்கும் வசதி.
மருத்துவர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷன் எப்போதுமே கோழி கிறுக்கியது போல் இருக்கிறது என்று சினிமாவில் கலாய்க்கும் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. அதற்கு ஒரு விடிவுபோல் கூகுள் நிறுவ.னம் ஒரு புதிய செயற்கை நுண்னறிவு மற்றும் மெஷின் லேர்னிங் மாடலை உருவாக்கியுள்ளது
சில சமயம் புரியாத வகையில் எழுதப்பட்ட மருத்துவ ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் கூகுள் லென்ஸ் உதவி செய்யும். இது AI தொழில்நுட்பம் மூலம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொழில்நுட்பம் சேவைக்கு வரும் போதுதான் இது குறித்து மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குறிப்பு உள்பட எந்த ஒரு மோசமான கையெழுத்தில் எழுதப்பட்ட ஆவணங்களாக இருந்தாலும் இந்த தொழில்நுட்பம் மூலம் கூகுள் லென்ஸ் மூலம் அதை எளிமைப் படுத்த முடியும். எனவே மிக எளிதில் புரியாத எழுத்துக்களை கூட நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அதே நேரத்தில் இதற்கான பணிகள் நிறைய உள்ளது என்றும் அந்த பணி முடிவடைந்ததும் மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அதன் முழு விபரங்களை அறிந்து கொள்ளவும் கூகுள் லென்ஸ் பயன்படுத்தலாம் என்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் மூலம் இந்த வசதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்டு, உபயோக படுத்தப்படும் தொழில்நுட்பமே செயற்கை அறிவுத்திறன்(Artificial Intelligence). இது மனிதர்க்கு மாற்றானது அல்ல. மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தவே பயன்படுகிறது.