Happy Birthday Google: “என்ன வேண்டும் உனக்கு... எல்லாமே இங்க இருக்கு..” - 25ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!
கூகுள் தனது 25வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள்.
Google Doodle: கூகுள் தனது 25வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள்.
கூகுள்:
கடவுளை நம்புவது போல கண்ணை மூடுக்கொண்டு நாம் நம்பும் மற்றொரு நம்பிக்கை கூகுள். நாம் தினசரி பயன்படுத்தும் இணையதளத்தில் இன்றியமையாதது கூகுள். எந்த சந்தேகம் தோன்றினாலும், எதைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினாலும், நாம் முதலில் பார்ப்பது கூகுள் தான். செர்கே ப்ரின், லார் பேஜ் இவர்களின் முயற்சியால் இதே நாளில் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள், இன்று இணையதள பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. செப்டம்பர் 27ஆம் தேதி 1998ஆண்டு முதன்முதலாக கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து யூடியூப், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், பிளே ஸ்டோர் என அடுத்தடுத்து அப்டேட்களை அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது.
உலகம் முழுவதும் 430 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை வைத்திருக்கும் கூகுள், ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் 200க்கும் அதிமான நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாகி அதிகாரி, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி தான். தற்போதைய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, சென்ற அண்டில் 1,846 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றிருக்கிறார். அதேபோல, கூகுள் நிறுவனத்தில் 50 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள். உலகம் முழுவதும் வரைப்படம் மூலம் வழி சொல்வதில் இருந்து, பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கூகுளுக்கு இன்று 25வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு டூடுல் வெளியீடு:
Looking back at some birthday doodles as we look forward to celebrating our 25th birthday tomorrow 🥹🎂#GoogleDoodle pic.twitter.com/htqszNy5da
— Google India (@GoogleIndia) September 26, 2023
இதனையொட்டி சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது, 25வது பிறந்தநாள் என தெரிவிக்கும் வகையில், கூகுளில் இருக்கும் ’0’ எழுத்தை எடுத்து 25 என்று குறிப்பிட்டு டூடுல் வெளியிட்டுள்ளது. 'G25gle' என்ற டூடுலை வடிவமைத்து கூகுள் நிறுவனம் வெளியிட்டு கொண்டாடுகிறது. இந்த டூடுல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
Whatsapp: அச்சச்சோ! இந்த மொபைல்களில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாதாம்.. லிஸ்ட்ல உங்க போன் இருக்கா?