Google BARD AI : 180 நாடுகளில் அறிமுகமான Google BARD AI - அம்சங்கள் என்ன...? எதற்கெல்லாம் பயன்படும்? ஓர் அலசல்
Google Bard AI Features: இன்று முதல் கூகுள் தனது BARD தளத்தை இந்தியா உட்பட 180 நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
GoogleBard AI Features: இன்று முதல் கூகுள் தனது BARD தளத்தை இந்தியா உட்பட 180 நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Google BARD AI:
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பம் பயணத்தை குறித்தும் அதன் முன்னேற்றத்தை குறித்தும், எதிர்கால முன்னேற்றம் குறித்து விவாதிக்க ஆண்டு தோறும் ஐ.ஓ. (I/O) கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுந்தர் பிச்சை மற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து விவாதம் நடத்துவார்கள். அந்தவகையில் இந்ததாண்டு இன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை Google Bard AI அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
180 நாடுகள்
இன்று முதல் கூகுள் தனது Bard தளத்தை இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பொதுமக்கள் எவ்விதமான இடையூறுமின்றி பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. . ChatGPT க்கு போட்டியாக இப்போது 180+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்துடன் கூடுதலாக, இப்போது கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் கிடைக்கிறது. விரைவில் 40+ மொழிகளுடன் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கூகுள் Bard குறித்தும் அதனின் பயன்பாடு, அப்டேட்டுகள் பற்றி காணலாம்.
அம்சங்கள் என்ன?
கூகுள் பார்ட் தளம் palm 2 என்ற கட்டமைப்பில் இயங்கி வருகிறது. palm 2 என்பது கூகுள் உருவாக்கியுள்ள புதிய large language model (LLM). இதன் அடிப்படையிலேயே கூகுள் பார்ட் இயங்கி வருகிறது. ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட ப்ரோகிராமிங் லேங்குவேஜில் சிறந்து விளங்குகிறது பார்ட். Google Sheets, Python, C++, Java Sacript, Ruby உட்பட பல முக்கிய தொழில்நுட்பத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோடிங் உதவிகளை வழங்குகிறது.
இந்நிலையில், கூகுள் Bard அதனின் பயன்பாடு, அப்டேட்டுகள் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நாம் அனைவரும் பொதுவாக கூகுளில் ஒரு தகவலை தேடும்போது, அதற்கு தொடர்புடைய லிக்குகளை கிளிக் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் தற்போது இந்த Bard ஆப்ஷனில் டைப் செய்த அடுத்த நொடியில் மொத்த விபரத்தையும் தொகுத்து மக்கள் இயல்பாக படிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் இணைப்பை கிளிக் செய்வது, தேடுவது போன்ற விஷயங்கள் இருக்காது.
தகவல் தேடுவது எளிது:
மேலும், கூகுள் பார்ட்டில் புகைப்படங்களை பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த அம்சமாது மக்கள் ஒரு தகவலை தேடுவதை எளிதாக்க உதவுகிறது.
இதனை அடுத்து, கூகுள் போட்டோஸில் ஒரு மேஜிக் எடிட்டர் சேர்க்கப்படும். பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த மேஜிக் எடிட்டர் (Magic Editor) ஆனது புகைப்படங்களை மேம்படுத்த உதவுகிறது. இது செமாண்டிக் இன்ஜினியரிங் (semantic engerneering) மற்றும் ஜெனரேட்டிவி ஏஐ-ஐ (generative AI) பயன்படுத்தி இந்த அம்சத்தை செயல்படுத்துகிறது.
கூகுள் மேப்ஸில் இம்மர்சிவ் வியூ (Immersive view) என்கிற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்திற்கு செல்ல விரும்பினால் கூகுள் மேப்ஸ் உங்களுக்கு பல்வேறு விருப்பங்களை வழங்கும். அந்தவகையில் தற்போது பாதையின் போட்டோரியலிஸ்க் வியூவை பார்க்க விரும்பினால் இம்மர்சிவ் வியூ அம்சம் பயனர்களுக்கு உதவும்.