JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?
ஜியோவின் புதிய ஃபோன் விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 10ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் 44வது வருடாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மலிவு விலை ஸ்மார்ட் ஃபோனை ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
கூகுள் மற்றும் ஜியோ குழுக்கள் கூட்டாக இணைந்து இந்த ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது அல்ட்ரா-மலிவு மற்றும் பேக்ஸ் கட்டிங்-எட்ஜ் அம்சங்கள் ஆகும். கூகுள் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஃபோன் விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 10ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோஃபோன் நெக்ஸ்டின் சிறப்பம்சங்கள்:
1. சூப்பர் ஸ்மார்ட் ஃபோன், குறைந்த விலையில்இந்த காலத்தில், ஸ்மார்ட் ஃபோனின் தேவை இன்றியமையாததாக மாறிவிட்டது. பெரும்பாலும் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் வந்துவிட்டதால், ஸ்மார்ட் ஃபோனின் தேவை அதிகமாகிவிட்டது. வெவ்வேறு மாடல்களில், விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனையில் இருக்கின்றன. அந்த வரிசையில், இணைய வசதியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்த ஜியோ நிறுவனம், மலிவு விலையில் பட்ஜட் ஸ்மார்ட்ஃபோன் நெக்ஸ்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. நிச்சயம், மிகக்குறைந்த விலையில், அதிரடியான ஆஃப்பர்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
2. இந்திய மொழிகளில் ஃபோன் வசதிகள்பல மொழிகள் பேசும் மக்களை கொண்ட இந்தியாவில், அவரவர் தாய் மொழியிலேயே ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவதற்கு ஏதுவாக, புதிய வசதியை ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், பெரும்பாலான இந்திய மொழிகளில் ஜியோஃபோன் நெக்ஸ்டை பயன்படுத்த முடியும் என தெரிகிறது.
3. அல்ட்ரா கேமரா ஆப்ஷன்ஸ்
வேகமாக இயங்கக்கூடிய அதே சமயம் தரமான க்ளாரிட்டியில் எடுக்கக்கூடிய கேமரா ஆப்ஷனை இந்த ஃபோன் கொண்டுள்ளது. இரவு நேரங்களிலும் துல்லியமாக படம்பிடிக்கும் வசதிகளை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி, ஸ்நாப்சாட் உள்ளிட்ட செயலிகளுடன் கூட்டணி அமைத்து ஸ்நாப்சாட் ஃபில்டர், கேமரா வசதிகளை உள்ளங்கியதாகவும் வடிவமைத்து வருகிறது.
4. லேட்டஸ்ட் சிஸ்டம் அப்டேட்ஸ்
மார்க்கெட்டில் வெளியாகும் லேட்டஸ் சிஸ்டம் அப்டேட்டுகளை கொண்டதாக இந்த ஃபோன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லேட்டஸ்ட் ஆப் பயன்பாட்டை பெறலாம்.
5. பில்ட்-இன் செக்யூரிட்டி வசதிகள்
கூகுள் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பதால், கூகுள் ப்ரொட்டெக்ட் ஆப் வசதி மூலம் பில்ட்-இன் செக்யூரிட்டி வசதிகளை ஜியோ உறுதிப்படுத்துகிறது. உலக தர ஃபோன் செக்யூரிட்டி வசதிகள் இருக்கும் என்பதால், பல ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது என தெரிகிறது.
6.ஜியோ-கூகுள் இரண்டு ‛ஆப்’களும் இருக்கும்
ஜியோ - கூகுள் நிறுவனம் இணைந்து இந்த ஃபோனை வடிவமைத்துள்ளதால், ஜியோ மற்றும் கூகுள் சம்பந்தமான ஆப்களை தனியாக பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. கூகுள் மற்றும் ஜியோ சம்பந்தமான ஆப்களிலேயே பெரும்பாலான முக்கிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
7. விலை குறைவாக இருக்கும்(5 ஆயிரத்திற்குள் இருக்கலாம்)
மலிவு விலை ஃபோன் சேவைகளுக்கு பெயர்போன ஜியோ நிறுவனம், புதிதாக அறிமுகமாகியுள்ள ஜியோஃபோன் நெக்ஸ்ட் மாடலையும் குறைந்த விலையில் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரா-மலிவு ஃபோன் என இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளதால், குறைந்த விலையில், 5,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
8. லிசன் பட்டன் (வாய்ஸ் அசிஸ்டெண்ட் மாதிரி புது வகை)
வாய்ஸ் - அசிஸ்டண்ட் வசதியை போல, இந்த ஃபோனில் ‘லிசன்’ பட்டன் மூலம் புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதியில் என்ன சிறப்பு என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டியுள்ளது.
9. பட்ஜெட் போனில் 5ஜி
ஜியோ சேவைகளுக்கென சிறப்பம்சமான, குறைந்த விலையில், லேட்டஸ் அப்டேட் வழிமுறையை இந்த ஃபோன் அறிமுகத்திலும் ஜியோ பின்பற்றுகிறது. இதன் மூலம், மலிவு விலையில் 5ஜி ஃபோன் என்பதாக விற்பனைக்கு வர உள்ளது.
10. லேட்டஸ்ட் வெர்ஷன் (தற்போது ஆண்ட்ராய்டு 11 தான் லேட்டஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது)
லேட்டஸ்ட் அப்டேட்டுகளை உறுதிப்படுத்தபோவதாக அறிவித்திருக்கும் ஜியோ நிறுவனம், நிச்சயம் லேட்டஸ்ட் ஆண்டுராய்டு வெர்ஷனை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.