Smartphones Launch in 2022: ஒன்பிளஸ் டூ ஸியோமி- ஜனவரி மாதம் சந்தைக்கு வரும் புதுவரவு என்னென்ன?
New Smartphone Launch in 2022: வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சந்தைக்கு வர உள்ள புதிய செல்போன்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இன்னும் ஒரு வாரத்தில் வர உள்ளது. புதிய ஆண்டில் பலருக்கு பல புதிய திட்டங்கள் இருக்கும். அதேபோல் நிறுவனங்களுக்கும் புதிய ஆண்டில் பல்வேறு புதிய திட்டங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக செல்போன் விற்கும் நிறுவனங்கள் புது ஆண்டின் முதல் மாதத்தில் சில புதிய மாடல்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களையும் கவரும்.
இந்நிலையில் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சந்தைக்கு வர உள்ள புதிய செல்போன்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ஒன்பிளஸ் 10 ப்ரோ:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த முக்கியமான மாடல்களில் ஒன்று ஒன்பிளஸ் 10 ப்ரோ. இந்த மொபைலின் முக்கியமான சிறப்பம்சம் 8ஆவது ஜென்ரேஷன் சிப்செட் மற்றும் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே. இந்தப் போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய மாடல் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
விவோ வி23 சீரிஸ்:
விவோ நிறுவனத்தின் அடுத்த முக்கியமான மாடல் விவோ வி23 சீரிஸ். இந்தப் புதிய போன் வரும் ஜனவரி 5ஆம் தேதி சந்தையில் களமிறங்க உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் மெலிந்த 3 டி மொபைல் போனாக இது அமைய உள்ளது. 7.36 மில்லி மீட்டர் கர்வு டிஸ்பிளே உடன் இந்த போன் அமைய உள்ளது. இது விவோ எஸ்-12ன் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.
ரியல்மீ ஜிடி 2 ப்ரோ மாஸ்டர் எடிசன்:
ரியல்மீ ஜிடி2 ப்ரோ என்பது ஜிடி சீரிஸின் அடுத்த மாடலாக அமைந்துள்ளது. இந்த மாடல் போனில் ஸ்னாப்டிராகன் 8ஆவது ஜென்ரேஷன் சிப்செட் அமைந்துள்ளது. இது மிகவும் அட்டகாசமான ஸ்கிரீன் வசதியை பெற்றுள்ளது. இந்த மொபைல் போனும் வரும் ஜனவரி மாதம் சந்தைக்கு வர உள்ளது.
இன்ஃபினிடிக்ஸ் 5ஜி:
இன்ஃபினிடிக்ஸ் 5ஜி மொபைல் போன் வரும் ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ள 5ஜி போன்களில் ஒன்று. இந்த போனின் விலை சுமார் 20 ஆயிரத்திற்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்கள் சந்தையில் ஏற்கெனவே உள்ள லாவா அக்னி, ரெட்மி நோட் ஆகியவற்றிற்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஸியோமி 11ஐ மற்றும் 11ஐ சூப்பர் சார்ஜ்:
ரெட்மீ நிறுவனம் வரும் ஜனவரி மாதம் ஸியோமி 11ஐ மற்றும் 11 ஐ சூப்பர் சார்ஜ் என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 11 ஐ சூப்பர் சார்ஜ் மாடல் 120 வாட் வசதியில் வேகமாக பேட்டரியை சார்ஜ் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு மாடல்களும் சந்தைக்கும் வரும்போது இதன் சிறப்பமசங்கள் குறித்து தெளிவாக தெரியவரும்.
மேலும் படிக்க:இனி வாட்ஸ் அப்பில் ஷாப்பிங் செய்யலாம்.. அடுத்த சிக்ஸர் அடிக்க வருது புது அப்டேட்!!