மேலும் அறிய

Facebook: லொகேஷன் தொடர்பான சேவைகளை நிறுத்தும் பேஸ்புக்! இனி இந்த அம்சமெல்லாம் கிடைக்காதா?

நியர்பை ஃப்ரெண்ட்ஸ் என்பது மக்கள் தங்களின் தற்போதைய இருப்பிடத்தை அவர்களின் Facebook நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் அம்சமாகும்.

9to5Mac என்னும் டெக் பக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேஸ்புக் அதன் லொகேஷன் சார்ந்த சேவைகளை ஜூன் மாதத்தில் நிறுத்தப்போவதாக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. லொகேஷன் தொடர்பாக பேஸ்புக் ‘அருகில் உள்ள நண்பர்கள் (nearby friends)', 'வானிலை எச்சரிக்கைகள் (weather alert)', 'இருப்பிட வரலாறு (location history)' மற்றும் சில அம்சங்களை வழங்கி வந்தது. இவை இனி இந்த மாத இறுதிக்குப் பிறகு கிடைக்காது என்று மெட்டா நிறுவனம் பேஸ்புக் பயனர்களுக்குத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளது. இந்த அம்சங்கள் நிறுத்தப்பட்டதற்கான சரியான காரணத்தை நிறுவனம் கூறவில்லை, ஆனால் இந்த அம்சங்கள் தொடர்பான அனைத்து பயனர் தகவல்களும் பேஸ்புக் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனர்கள் இந்த அம்சங்களின் முடிவு குறித்த அறிவிப்பை பேஸ்புக் மொபைல் செயலியின்மூலம் பெற்று வருகின்றனர். நியர்பை ஃப்ரெண்ட்ஸ் என்பது மக்கள் தங்களின் தற்போதைய இருப்பிடத்தை அவர்களின் Facebook நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் அம்சமாகும்.

Facebook: லொகேஷன் தொடர்பான சேவைகளை நிறுத்தும் பேஸ்புக்! இனி இந்த அம்சமெல்லாம் கிடைக்காதா?

ஆகஸ்ட் 1, 2022 வரை பயனர்கள் தங்கள் பின்னணி இருப்பிடத் தரவு மற்றும் லொகேஷன் ஹிஸ்டரி அணுகவும் பதிவிறக்கவும் முடியும் என்றும் பேஸ்புக் அறிவித்தது. இந்த தேதிக்குப் பிறகு, சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அதன் அறிக்கை குறிப்பிடுகிறது.

பயனர் தரவு சேகரிப்பைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட இந்த நடவடிக்கையின் சரியான காரணத்தை மெட்டா வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த நடைமுறைகள் குறித்து பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களிடமிருந்து கிடைத்த ஆய்வு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு தரவுகளை பகிர்வதற்கு அனுமதிக்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அகற்றப்படும் என்று இந்த ஆண்டு பிப்ரவரியில் மெட்டா நிறுவனம் மிரட்டியது. இந்த தரவு பரிமாற்றங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் ஸ்னூப்பிங்கிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கவில்லை என்று கண்டறியப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு அட்லாண்டிக் நாடுகடந்த தரவு பரிமாற்றத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்கான விவரங்களை இறுதி செய்துள்ளது. இந்த விவரங்கள், பேஸ்புக், கூகுள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பயனர்களின் டேட்டாக்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget