Twitter Update: லிங்க்ட்இன்னுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்.. இனி ட்விட்டர்லையே வேலை தேடலாம். அடுத்த ப்ளான் இதுதான்!
எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வேலைவாய்ப்பு தேடல் மற்றும் பதிவு சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Twitter Update: எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வேலைவாய்ப்பு தேடல் மற்றும் பதிவு சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே அதில் மாற்றங்கள் என்பது குவிந்து வருகின்றன. நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன.
அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. மேலும், பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமீபத்தில் ட்விட்டர் பெயரை எக்ஸ் என மாற்றினார்.
வேலைவாய்ப்புகளை வழங்கும் ட்விட்டர்:
Unlock early access to the X Hiring Beta — exclusively for Verified Organizations.
— Hiring (@XHiring) August 25, 2023
Feature your most critical roles and organically reach millions of relevant candidates.
Apply for the Beta today 🚀: https://t.co/viOQ9BUM3Y pic.twitter.com/AYzdBIDjds
இதில், அடுத்தக்கட்டமாக எக்ஸ் தளத்தில் வேலைவாய்பு தேடல் மற்றும் பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லின்க்ட் இன் மற்றும் பல பிரபலமான வேலைவாய்ப்பு தேடுதல் தளத்திற்கு போட்டியாக எலான் மஸ்க் இந்த சேவையை கொண்டு வந்துள்ளார். மேலும், ட்விட்டர் ஹயரிங் (Twitter Hiring) எனும் புதிய கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், ட்விட்டர் ஹயரிங் (Twitter Hiring) மூலம் வெரிஃபைடு நிறுவனங்கள் 5 வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பதிவு செய்யலாம். இந்த சேவை வெரிபைடு கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கப்படும். இந்த சேவைக்கு மாதம் 1000 டாலர் கட்டணம் உள்ளது. இந்திய ரூபாயில் கிட்டதட்டட 82,300 ரூபாய் ஆகும். இதற்காக 20 க்கும் மேற்பட்டோரை எலான் மஸ்க் வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்த அம்சம், மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
Madurai Train Accident: மதுரை கொடூர விபத்து..! லக்னோ செல்லும் சென்னை விமான நிலையம் வந்த உடல்கள் ..!