Elon Musk demand Twitter: 280 வார்த்தைகள் பத்தவில்லை.. ட்விட்டருக்கு செக் வைக்கும் எலன் மஸ்க்..!
பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க், ட்விட்டர் எழுத அனுமதிக்கும் 280 வார்த்தைகள் என்பது போதாததாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் ட்விட்டர் எழுத அனுமதிக்கும் 280 வார்த்தைகள் என போதவில்லை என கூறியிருக்கிறார்.
இது குறித்து ட்விட்டர் பதிவர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டை குறிப்பிட்டு, “ இந்தப் பதிவிலிருந்து நான் தெரிந்து கொள்வது என்னவென்றால், ட்விட்டரில் நீண்ட பதிவுகளை இடுவதற்கான தேவை என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். ட்விட்டரில் பதிவர்கள் பதிவிடும் கருத்துக்களை எடிட் செய்யும் வகையில், எடிட் பட்டன் ஆப்ஷன் ட்விட்டரில் இடம்பெற வேண்டும் என முன்னதாக அவர் கூறியிருந்த நிலையில், அதற்கு ட்விட்டர் நிறுவனம், சில விதிமுறைகளுடன் அந்த ஆப்ஷனை வழங்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறியிருந்தது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்த எலன் மஸ்க்
முன்னதாக, டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் வாங்க முன் வந்தார். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு தலைவர் பிரெட் டெய்லருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்,“ ட்விட்டர் நிறுவனத்தின் ஷேர் ஒன்றை 54.20 டாலர் என்ற முறையில் ரொக்கமாக கொடுத்து வாங்க விருப்பம் தெரிவிக்கிறேன்.
View this post on Instagram
என்னுடைய இந்த சலுகை சிறந்தது இறுதியானது. இதை ஏற்காவிட்டால், ட்விட்டரில் நான் பங்குதாரராக இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் 12 சதவீதம் உயர்ந்தன. ஆனால் இந்த சலுகையை ட்விட்டர் நிறுவனம் நிராகரித்து விட்டது.
அதற்கு முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கியிருந்தார். இதனால் அவர் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் நபர் என்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து அவருக்கு ட்விட்டர் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எலன் மஸ்க் அதை நிராகரித்துவிட்டார்.