Twitter Blue Users :ட்விட்டர் ப்ளூ டிக் பயனாளுக்கு விரைவில் புதிய அப்டேட்: எலான் மஸ்கின் அடுத்தடுத்த அதிரடி!
ட்விட்டரில் எலான் மஸ்க் அறிவித்திருக்கும் புதிய அப்டேட்.
ட்விட்டரில் புதிய ப்ளூ டிக் பயனர்களுக்கு விரைவில் மியூட் மற்றும் பிளாக் சிக்னல் ("mute and block signals" ) வசதி அறிமுகம் செய்யப்படும் என்று எலாக் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடியாக மாற்றங்களை செய்து வருகிறார்.
எலான் மஸ்க் நேற்றைய (18,சனிக்கிழமை)தனது ட்விட்டர் பதிவில், மியூட் மற்றும் பிளாக் சிக்னகலை ப்ளூ டிக் வெரிஃபைட் செய்த பயனர்களுக்கு அறிமுகம் செயப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது ‘downvoted’. ட்விட்டரில் உடன்படாத கருத்துக்களுக்கு ரியாக்ட் செய்யும் வகையில் அப்டேட் வழங்கப்பட உள்ளது.
Twitter will start incorporating mute & block signals from Blue Verified (not Legacy Blue) as downvotes
— Elon Musk (@elonmusk) December 17, 2022
எலான் மஸ்க்கும் ட்விட்டரும்:
மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு 'official' எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு 'parody' எனும் பேட்ச் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ட்விட்டரில் கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய அப்டேட்கள்:
ட்விட்டர் வார்த்தைகள் எண்ணிக்கை:
ட்விட்டர் பயனர் ஒருவர் எலான், ட்விட்டரில் 280 வார்த்தைகளில் இருந்து 4 ஆயிரம் வார்த்தைகளாக உயர்த்தப்படுவது உண்மையா? என்று கேள்வி அனுப்பியுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டரில் ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார்.
இனி பல நிறங்களில் ட்விட்டர் வெரிஃபிகேசன் டிக்:
ட்விட்டரில் போலியான அக்கவுண்ட்கள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு, ப்ளூ டிக் மட்டுமின்றி தனிநபர் மற்றும் நிறுவனங்களை தனியே அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் வெவ்வேறு வண்ணங்களால் ஆன வெரிஃபிக்கேசன் டிக் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வண்ணங்களின் விவரம்:
கோல்டு நிற டிக் தனியார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கு கிரே அதாவது சாம்பல் நிற டிக், பிரபலங்கள் அல்லது தனிநபர் ஆகியோருக்கு ப்ளூ நிற டிக் என்ற நடைமுறை இனி தொடர உள்ளது.
கிரே டிக் மற்றும் ’official’ என்ற லேபிள் கட்டணம் செலுத்தி வாங்க முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
’official' என்ற லேபிள் அரசு சார்ந்த ட்விட்டர் அக்கவுண்ட்கள், வணிக ரீதியிலான நிறுவனங்கள், பெரும் செய்தி ஊடகங்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிரபலமானவர் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். கோல்டு, கிரே மற்றும் ப்ளூ நிற டிக் எவ்வாறு வழங்கப்படுகிறது அதன் வரையறைகள் குறித்து அடுத்த வாரங்களில் தகவல் வெளியாகும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.