மேலும் அறிய

Alienware முதல் XPS சீரிஸ் வரை.. `டெல்’ அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்கள்! - என்ன ஸ்பெஷல்?

டெல் நிறுவனம் இந்தியாவில் புதிய லேப்டாப் மாடல்களை வெளியிட்டுள்ளது. இவை மாணவர்கள், கேம் விளையாடுபவர்கள், தொழில் வல்லுநர்களிள் ஆகியோரின் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

டெல் நிறுவனம் இந்தியாவில் புதிய லேப்டாப் மாடல்களை வெளியிட்டுள்ளது. இவை மாணவர்கள், கேம் விளையாடுபவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளன. ஏலியன்வேர் மாடல் முதல் டெல் G15 மாடல் வரை, டெல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், டெல் நிறுவனம் XPS 15, XPS 17 ஆகிய மாடல்களின் வடிவமைப்பில் சில மாற்றங்களைச் செய்து, இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எனினும், அனைவரின் கண்களும் தற்போது வெளியாகியிருக்கும் ஏலியன்வேர் மாடலின் X சீரிஸ் மீதே உள்ளன. ஏலியன்வேர் தயாரித்திருக்கும் மிக மெல்லிய லேப்டாப்கள் இவை. 

டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள மாடல்கள் என்னென்ன?

Alienware x15 

Alienware முதல் XPS சீரிஸ் வரை.. `டெல்’ அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்கள்! - என்ன ஸ்பெஷல்?

ஏலியன்வேர் சீரிஸில் தற்போது டெல் நிறுவனம் Alienware x15 மற்றும் Alienware x17 ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ளது. இதில் Alienware x15 மாடலில் 11th Gen Intel® Core™ i9-11900H processor, 32GB DDR4 RAM ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை வாங்குபவர்களுக்கு 1TB M.2 PCIe NVMe SSD ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது. 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ள இந்த மாடலில் 360Hz refresh rate 300nits with GSYNC வசதியும் உண்டு. இந்தியாவில் இந்த மாடலின் தற்போதைய விலை 2,40,990 ரூபாய். 

Alienware x17

Alienware முதல் XPS சீரிஸ் வரை.. `டெல்’ அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்கள்! - என்ன ஸ்பெஷல்?

Alienware x17, முந்தைய மாடலான Alienware x15 மாடலை விட சிறந்தது. இதில் 1th Gen Intel® Core™ i9-11980HK processor கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கேம் விளையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மாடலில், 32GB DDR4, 1TB M.2 PCIe NVMe SSD ஸ்டோரேஜ் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் NVIDIA® GeForce RTX™ 3080 16GB GDDR6 கிராபிக்ஸ் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெரிய அளவிலான கேம்களையும், அதிக கிராபிக்ஸ் கொண்ட கேம்களையும் மிக எளிதாக, எந்தத் தடங்கலுமின்றி விளையாட முடியும். இது அளவிலும் முந்தையதை விட சற்றே பெரியது.  17.3" FHD டிஸ்ப்ளேவுடன் 360Hz refresh rate அம்சமும் இதில் உள்ளது. இந்தியாவில் இந்த மாடலின் தற்போதைய விலை 2,90,990 ரூபாய்.

Dell G15 சீரிஸ்

Alienware முதல் XPS சீரிஸ் வரை.. `டெல்’ அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்கள்! - என்ன ஸ்பெஷல்?

Dell G15 சீரிஸ் பெரும்பாலும் கேம் விளையாடுபவர்களுக்கும், மாணவர்கள் கல்விக்காகப் பயன்படுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம். G15 சீரிஸில் கிடைக்கும் லேப்டாப்களில் 11th Gen Intel TGL-H அல்லது AMD Ryzen ப்ராசஸர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதில் NVIDIA GeForce RTX 30 சீரிஸ் கிராபிக்ஸ் கார்ட் பொருத்தப்பட்டுள்ளது. 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ள இந்த மாடலில் 120Hz refreshing rate உள்ளது. AMD ப்ராசஸர் உள்ள மாடல்களின் விலை 82,990 ரூபாய் முதல் தொடங்குகிறது; அதே இண்டெல் ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கும் மாடல்களின் விலை 94,990 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த சீரிஸ் வரும் செப்டம்பர் 23 முதல் விற்பனைக்கு வருகின்றன. 

Dell XPS 15

Alienware முதல் XPS சீரிஸ் வரை.. `டெல்’ அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்கள்! - என்ன ஸ்பெஷல்?

Dell XPS 15 மாடலில் 11th Gen Intel CoreTM i9H ப்ராசஸர் வசதியுள்ளது. இதனோடு, Nvidia GeForce RTX 3050 Ti GPU range கிராபிக்ஸ் கார்டைப் பொருத்திக் கொள்ள முடியும். இந்த லேப்டாப் மாடலின் டிஸ்ப்ளே 4K Ultra HD+ ஆகவும், இதில் 100% Adobe RGB, 94% DCIP 3 colour gamut ஆகிய வண்ண மயமான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கேம் விளையாடுபவர்களின் அனுபவம் இதில் இன்னும் மேம்பட்டிருக்கும். இதன் விலை 2,23,990 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது வரும் செப்டம்பர் 23 முதல் விற்பனைக்கு வருகிறது. 

Dell XPS 17

Alienware முதல் XPS சீரிஸ் வரை.. `டெல்’ அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்கள்! - என்ன ஸ்பெஷல்?

Dell XPS 17 மாடலில் 11th Gen Intel Core i9-11980HK ப்ராசஸர் வசதியும், இதில் Nvidia GeForce RTX 3060 கிராபிக்ஸ் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளன. 17 இன்ச் டிஸ்ப்ளேவில் 4K UHD+ அம்சமும், 97Whr பேட்டரியும் இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை 2,64,490 ரூபார் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mobile Hacking Alert: உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? - கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
Mobile Hacking Alert: உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? - கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
iPhone 17: ரூ.20 ஆயிரம் கம்மி விலையில் ஐபோன் 17 ப்ரோ - எப்படி சாத்தியம்? அதிரடியான ஆஃபரை பெற டிப்ஸ்..
iPhone 17: ரூ.20 ஆயிரம் கம்மி விலையில் ஐபோன் 17 ப்ரோ - எப்படி சாத்தியம்? அதிரடியான ஆஃபரை பெற டிப்ஸ்..
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Scorpio N Vs Harrier EMI Plan: ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
Embed widget