Chat Gpt : ஆப்பிள் போனுக்கு என்டரி கொடுத்த சாட் ஜிபிடி...புதிய வசதியை அறிமுகப்படுத்திய Open AI...அப்போ ஆன்ட்ராய்டுக்கு எப்போ...?
உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ChapGPT-ன் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டுள்ளது Open AI நிறுவனம்.
Chat Gpt : உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ChapGPT-ன் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டுள்ளது Open AI நிறுவனம்.
சாட் ஜிபிடி(ChatGPT)
நமது அன்றட வாழ்வில் விடை தெரியாத எந்த ஒரு கேள்வியை நாம் எதிர்கொண்டாலும், அதற்கான விடையை தேடி நாம் செல்லும் முதல் இடம் கூகுள். ஏன் என்றால் கூகுளில் கிடைக்காத பதில்களும் இல்லை, தகவல்களும் இல்லை என்ற மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. ஆனால், அதற்கே சவால் விடும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், OpenAI எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு அறிமுகமானது தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி(ChatGPT).
பொதுவாக நாம் ஒரு விஷயம் குறித்து கூகுளில் தேடினால், அதுதொடர்பானது மட்டுமின்றி பல்வேறு விதமான தகவல்களை நமக்கு வழங்கும். அனால், இந்த சாட்ஜிபிடி சரியாக நாம் எதை தேடுகிறோமோ அது குறித்து, தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து தேவையான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டும் கொடுக்கும். அதோடு, உதாரணத்திற்கு கட்டுரை, மின்னஞ்சல் மற்றும் கதை என எதை கேட்டாலும், எழுதி கொடுக்கும் திறனையும் சாட்ஜிபிடி கொண்டுள்ளது
இதன் காரணமாக தான் அறிமுகமான வெறும் இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. இதன் வளர்ச்சி உலகளவில் முதலிடம் வகிக்கும் கூகுள் நிறுவனத்திற்கு பாதகமாகவே கருதப்பட்டது. இதனால், கூகுள் பயனாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆப்பிள் ஸ்டோரில் சாட் ஜிபிடி
இந்நிலையில் சாட் ஜிபிடி செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) Open AI நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சாட் ஜிபிடியில் அனைத்து வசதிகளும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் ஆப்பிள் இருக்கும். ஐபோன் பயனர்களுக்கான சாட் ஜிபிடியின் பயன்பாட்டின் மூலம் பயனர்கள் உடனடி மற்றும் துல்லியமான தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட் ஜிபிடியின் இணையத்தில் இருக்கும் அம்சம் அனைத்தும் ஐபோன் பயனர்கள் பயன்படுத்தும் சாட் ஜிபிடி ஆப்பிள் இருக்கும். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருப்பது GPT-3.5 வெர்ஷனில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் GPT-4 வெர்ஷனான Chatgpt plus என்ற அம்சத்திற்கு 20 டாலர் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வசதி IOS 6.1 மற்றும் அதன் பிறகு இயங்கும் ஐபோன் மாடல்களுக்கு மட்டுமே இந்த ஆப் கிடைக்கும். இந்த வசதியானது தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் வாரங்களில் மற்ற நாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்ராய்டு பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க