மேலும் அறிய

BSNL: செம்மையான திட்டமா இருக்கே.! இனி சிம்கார்டு இல்லாமல் பேசலாம்; மாஸ்காட்டும் பி.எஸ்.என்.எல்

BSNL D2D: இனி சிம் கார்டு இல்லாமலேயே அழைப்புகளை மேற்கொள்ளும் சேவையை , பி.எஸ்.என்.எல் விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், விரைவில் பல்வேறு புதிய தொழில்நுட்ப சேவைகளின் அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.  

D2D தொழில்நுட்பம்:

பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனமானது, தொழில்நுட்ப ரீதியான , வெற்றிகர சோதனையை செய்துள்ளது. அது என்னவென்றால் டைரக்ட் டூ டிவைஸ் ( Direct To Devices – D2D) என்னும் சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. 

இந்த தொழில்நுட்பமானது, செயற்கைக்கோள் உதவியுடன் இணைந்து இயங்குகிறது. அதாவது, செயற்கைக்கோளுடன் இணைந்து சேவைகளை வழங்கும். இதன்  உதவியால், வாடிக்கையாளர்கள் சிம் கார்டு இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கிராமப்புற உள்ளிட்ட கடைசி பகுதிகளிலும் , தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.  இதற்காக Viasat உடன் இணைந்து BSNL ஆனது செயல்பட திட்டமிடப்பட்டுள்ளதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவ்வித காலநிலை: 

இந்த தொழில்நுட்பத்தால் அவசரநிலை  காலங்கள் அல்லது இயற்கை பேரழிவுகளில் உதவும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நிலம், காற்று மற்றும் கடலில்  என அனைத்து இடங்களிலும் வேலை செய்ய எனவும் கூறப்படுகிறது. 

இந்தியாவில் , தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடாபோன் உள்ளிட்டவை 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குகின்றன.  ஆனால் , பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், இன்னும் நாடு ,முழுவதிலும் 4 ஜி சேவையை வழங்கவில்லை. 

இந்நிலையில் டி2டி தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக செய்திருந்தாலும்,  எப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது கேள்விக்குறிதான் என பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read" Birsa Munda: ”எப்படி வாழவேண்டும் என கற்றுக் கொடுத்தவர்” பிர்சா முண்டாவை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி.!

மக்கள் எதிர்பார்ப்பு:

சமீபத்தில் BSNL, ஒரு புதிய லோகோ மற்றும் ஸ்லோகனை மாற்றியமைத்தது. புதிய தொழில்நுட்ப சேவையான டி2டி மற்றும் நேரடியாக 6ஜி பயன்பாட்டுக்கு வருவது என பல முன்னோடி திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனமானது, தயாராக வைத்திருந்தாலும் , எப்போது பயன்பாட்டுக்கு வரும் என உறுதியாக தெரியவில்லை. இதுபோன்ற சேவைகள், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால், மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Bhogi Festival History: நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
Embed widget