Apple Foldable i Phones: அறிமுகமாகிறதா ஃபோல்டபிள் ஐபோன் மாடல்? வெளியான தகவல் இதுதான்!
Apple Foldable iPhones: Apple நிறுவனம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Apple ஃபோன்களுக்கான க்ரேஸ் என்பதே தனி. போலவே, சந்தையில் மடக்கக்கூடிய (Foldable) ஃபோன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.அந்த வகையில், Apple நிறுவனம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஐஃபோன்:
ஸ்மாட்ஃபோன்கள் சந்தையில் நிலவும் போட்டிக்கு ஏற்ப நிறுவனங்கள் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகின்றன. சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி Z ஃபிலிப் மாடல் வரவேற்பு உள்ளது. ஃபோல்டபிள் ரக ஸ்மார்ட்ஃபோன்களுக்கு உள்ள வரவேற்பை புரிந்துகொண்டு Apple நிறுவனம் விரைவில் இரண்டு மாடல் ஃபோல்டபிள் ஐஃபோன் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐபேட்-களும் ஃபோல்டபிள் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது இரண்டையும் Apple நிறுவனம் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த மாடல்களுக்கான ப்ரோடோடைப் ஆரம்பகட்ட நிலையிலே இருப்பதாக தெரிகிறது. இதன் உற்பத்தியை தொடங்க அடுத்தாண்டு வரையிலும் வாய்ப்புகள் குறைவு. 2026-ம் ஆண்டு இதன் உற்பத்தி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி தொடர்பாக 2018ம் ஆண்டே டிம் கூக் அந்நிறுவன பொறியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது கேலக்ஸி Z ஃபிலிப் மாடல் ஃபோன் வெளியாவதற்கு முன்பே தொடங்கிய பேச்சுவார்த்தை 2020 -ல் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. ஃபோன் ஸ்கிரீன், அதன் ரெசோலியூசன் உள்ளிட்ட சிறப்பம்சங்களை அதில் கொண்டு வருவதில் இருக்கும் சிக்கல்களை அணுகுவது குறித்து பேசி வருதாகவும் தெரிவித்துள்ளது. Apple நிறுவனம் ஆசியாவில் உள்ள பல்வேறு காம்போனென்ட் தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
பேட்டரி அளவு, தற்போது சந்தையில் கிடைக்கும் ஐபோன் தரத்திற்கும் அதிலுள்ள எல்லா சிறப்பம்சங்களை வழங்குவது உள்ளிட்டவற்றில் சிக்கல் இருப்பதாக பொறியாளர்கள் அதை தெரிவித்துள்ளனர்.
ஐபோன் SE 4 மாடல்
ஐபோன் SE மாடல் தொடர்பான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாகாவே வெளியாகி வந்தன. அந்த வகையில், புதிய ஐபோன் SE 4 மாடல் 2025 ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் SE 4 மாடல் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய தகவலின்படி, ஐபோன் SE 4 மாடலில் நாட்ச் (Notch) நீக்கப்பட்டு டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படலாம். இது ஐபோன் 14 ப்ரோ வர்சனில் வழங்கப்பட்டது.
ஐபோன் SE 4 சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஐபோன் XR போன்றே இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், ஆப்பிளின் 5ஜி சிப்செட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2022-ம் ஆண்டு ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்தது.