மேலும் அறிய

நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின் ஹைடெக் யோசனை!

"செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் நிச்சயமாக மனித நீதிபதிகளுக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. ஆனால் தீர்ப்பு வழங்கும் பொழுது உதவியாக இருக்கும் “

இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் தேதியை நினைவு கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ‘அரசியலைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் இந்திய அரசியலமைப்பு தினம் முதன் முறையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரசியலமைப்பு தின நிகழ்வின் நிறைவு விழா நேற்று (சனிக்கிழமை ) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு  நீடித்த  நீதி வழங்குவதை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும் ‘ செயற்கை நுண்ணறிவு ‘ ஆச்சர்யமான வகையில் உதவும் என தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு   மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. 

நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின்  ஹைடெக் யோசனை!
வழக்குகளின் மேலாண்மை மற்றும் அவற்றின் அனுமதி விகிதங்கள் , ஆன்லைன் மூலம் சட்டங்கள் மற்றும் வழக்குகளில் தகவல்களை அறிதல்  போன்றவற்றை செயல்படுத்த தானியங்கி அல்காரிதம் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் பொழுது நீதித்துறையின் செயல்பாடுகளை  அதிகரிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது நிலையான நீதி வழங்கலை உறுதி செய்வதற்கும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்கும் வழி வகை செய்யும் என்கிறார் சட்ட அமைச்சர்   கிரண் ரிஜிஜு .

நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின்  ஹைடெக் யோசனை!
நீதி மன்றங்களில் எந்த வகையான உதவிகளை செயற்கை நுண்ணறிவு செய்ய போகிறது என கேட்கலாம். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஹூமனாய்ட் அல்லது செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் நிச்சயமாக மனித நீதிபதிகளுக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. ஆனால் நீதிகள் வழங்கும் பொழுதி நீதிபதிகளுக்கு உதவியாக , ஒரு சார்பற்ற தீர்ப்பை வழங்குவதற்கு அவை உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இப்படி மனிதர்களின் திறனுடன் செயல்படும் செயற்கை நுண்ணறிவை நாடும் பொழுது, விரைந்து நீதி வழங்க உதவியாக இருக்கும் என்ற அமைச்சர்  நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு போதுமான நீதித்துறை உள்கட்டமைப்பு முக்கியமானது என்றும் தற்போதைய அரசாங்கம், அனைவருக்கும் நீதியை எளிதாகவும் சரியான நேரத்தில் வழங்கவும் அனுமதிக்கும் வகையில் நீதிமன்ற உள்கட்டமைப்பை எளிமையாக்கியுள்ளது எனவும் தெவித்தார்,. மேலும் உள்கட்டமைப்பு தகராறுகளைத் தீர்ப்பதில் நீதித்துறையின் பங்கு முக்கியமானது.  தேசிய நலன்களை மனதில் வைத்து வளர்ச்சிப் பாதையின் ஓட்டத்திற்கும் செலவிடுவது உத்தமம் எனவும் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget