மேலும் அறிய

WWDC 2022: இன்று அறிமுகமாகும் Apple இரண்டாம் ஜெனரேஷன் AirPods Pro! கூடுதல் விவரங்கள் உள்ளே..

ஏர்போட்ஸ் ப்ரோ 2 வியட்நாமில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல Apple நிறுவனம் WWDC (Apple Worldwide Developers Conference) 2022 மாநாட்டை இன்று நடத்தவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு துவங்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனது புதிய படைப்புகள் குறித்த அப்டேட்ஸை  இந்த மாநாடின் பொழுது ஆப்பிள் அறிமுகப்படுத்துவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு  இன்று (செப்டம்பர் 7) ஆம் தேதி நடைபெறும் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் தனது புதிய கேட்ஜெட்ஸ் மற்றும் மென்பொருளை அறிமுகப்படுத்துவதுடன், ஆப்பிள் தனது ஏர்போட்ஸ் ப்ரோவின் இரண்டாம் தலைமுறையை காட்சிப்படுத்த தயாராக உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்று நிகழ்வில் சமீபத்திய ஐபோன்கள் மற்றும் பிற சாதனங்களை வெளியிடும் நிறுவனம், அக்டோபர் 2019 இல் முதன்முதலில் விற்பனைக்கு வந்த ஒரு மாடலைப் புதுப்பிக்கும் என்று ப்ளூம்பெர்க்கிலிருந்து ஆப்பிள் டிராக்கர் மார்க் குர்மன் தெரிவித்துள்ள நிலையில் அது ஏர்பாட்ஸ் புரோ என்பது தெளிவாக புரிகிறது.

ஏர்பாட் ப்ரோ- இரண்டாம் தலைமுறை வசதிகள் :

புதிய ஏர்பாட்ஸ் அடுத்த தலைமுறை H1 செயலி, சமீபத்திய புளூடூத் பதிப்பு மற்றும் பல மேம்படுத்தல்களை வழங்கும் என  கூறப்படுகிறது AirPods Pro 2 ஆனது Apple இன் Lossless Audio Codec (ALAC) அல்லது Bluetooth 5.2 ஆதரவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்போட்ஸ் ப்ரோ 2 ஆனது ஆப்பிளின் ஃபைண்ட் மை ஆப் மூலம் தேடும் போது ஒலியை வெளியிடும் சார்ஜிங் கேஸுடன், இன்-இயர் விங் டிப் வடிவமைப்பையும் ஆதரிக்குமாம். ஆனால் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ எந்த ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்களையும் உள்ளடக்கியிருக்க வாய்ப்பில்லை எனவே இந்த ஆண்டு  வெப்பநிலை அல்லது இதய துடிப்பு கண்டறிதல் போன்ற அம்சங்கள் இடம்பெறாது என தெரிகிறது.

ஆப்பிள் தனது ஒட்டுமொத்த ஆப்பிள் சாதனங்களிலும் ஆடியோ வசதியை மேம்படுத்தும் முய்றசியை செய்து வருவதாக தெரிகிறது. எனவே ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ , இரண்டாவது தலைமுறையிலும் நாம் அதனை எதிர்பார்க்கலாம்.ஏர்போட்ஸ் ப்ரோ 2 வியட்நாமில் தாயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐஓஎஸ் 16 :

அதே மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐஓஎஸ் 16 ஐயும் அறிமுகப்படுத்தவுள்ளது.  iOS 16 இல் புதிய lock screen வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆப்பிள் இதனை மிகப்பெரிய புதுப்பித்தல் வசதி என அழைக்கிறது. ஐஓஎஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக   lock screen இல் மாற்றம் கொண்டுவருவது இதுவே முதல்முறையாகும்.  பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி ஸ்கிரீனை மாற்றிக்கொள்ள முடியும் . குறிப்பாக  காலண்டர், ஃபிட்னஸ் டிராக்கிங் போன்ற widgets ஐ சேர்த்துக்கொள்ளலாம்.

லாக் ஸ்கிரீனுடன் சேர்த்து Focus mode -லும் புதிய அப்டேட்ஸை எதிர்பார்க்கலாம். Focus mode வசதிக்கு ஏற்ப லாக் ஸ்கிரீனை மாற்றிக்கொள்ள முடியும். இது தவிர ஐ.மெசேஜ்,Family Sharing வசதியில் மாற்றங்கள்,iCloud பகிரப்பட்ட Photo Library, பாதுகாப்பு சோதனை,Home app,புதிய டிக்டேஷன் வசதி என பல வசதிகள் இடம்பெறவுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamal thank MK Stalin : ”நான் சொன்ன வார்த்தைக்காக.. கண்கலங்கிய முதல்வர்” நெகிழ்ச்சியில் கலங்கிய கமல்Varunkumar IPS : “திருடர் கூட்டம்.. சாதி வெறி”மனைவி போட்டோவை மார்பிங் பொளந்து கட்டிய வருண் ipsSeeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
Amaran Box Office: ”அமரன்” படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள்? விஜய், ரஜினி உடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்
Amaran Box Office: ”அமரன்” படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள்? விஜய், ரஜினி உடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்
“முடிச்சு விட்டீங்க போங்க....”...  மதுரையில் குப்பை தொட்டிகளாக மாறிய சாலைகள்
“முடிச்சு விட்டீங்க போங்க....”... மதுரையில் குப்பை தொட்டிகளாக மாறிய சாலைகள்
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
Embed widget