மேலும் அறிய

Apple iPhone 13 Event Live Streaming| இன்று வெளியாகும் IPhone 13.. அறிமுக விழாவை எங்கு பார்க்கலாம்? எப்படி பார்க்கலாம்?

ஐபோன் புதிய மாடல் இன்று வெளியாகவுள்ளதால் உலகளவில் உள்ள ஆப்பிள் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சம் என எப்போதும் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தில் போன்களுக்கு என்றுமே தனி மவுசு உண்டு. மொபைல் மார்கெட்டில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய இந்த பிராண்ட் அடுத்தடுத்து தங்களது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. 

இந்நிலையில் விரைவில் ஐபோன் 13 வெளியாகும் என்ற செய்தி வெளியானதில் இருந்து எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள் ஈவெண்ட் வருகிற வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி (இன்று) , அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டது அந்நிறுவனம். இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 13 அறிமுக விழா நடைபெறவுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஐபோன் 13 மாடல்கள் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச், ஏர்பாட்ஸ்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple iPhone 13 Event Live Streaming| இன்று வெளியாகும் IPhone 13.. அறிமுக விழாவை எங்கு பார்க்கலாம்? எப்படி பார்க்கலாம்?
ஐபோன் 13 மாடல்களை பொருத்தவரை  ஐபோன் 13, ஐபோன்13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி என நான்கு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஐபோன் என்றாலே விலை அதிகம்தான். குறிப்பாக இந்தியாவில்  ஆப்பிள் உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லை என்பதால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. தற்போது வெளியாக உள்ள ஐபோன் 13 ஆனது விலையில் புதிய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது. 

NASA Perseverance Rover Update: மனிதகுலத்தின் மைல்கல் : செவ்வாய் கிரகத்தில் இருந்து சாம்பிள் கற்களை எடுத்த நாசா..!

தற்போது வெளியாக உள்ள இந்த ஐபோன் 13 இல் IOS 15  இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மே மாதம் நிகழ்ந்த ஈவெண்ட் ஒன்றில் ஐ.ஓ.எஸ் 15 ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த இயங்குதளத்தின் சோதனை ஓட்டம் ஒரு சில பதிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ஐபோன் 13 அறிமுக விழாவில் ஐ.ஓ.எஸ் 15 - இன் டீசர் வெளியாகலாம் என கூறப்படுகிறது.   குறிப்பாக ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் பயனாளர்களையும் கூட ஃபேஸ்டைமில் இணைக்கும் வசதிகளும் அறிமுகமாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் பயனாளர்களுக்கு இந்த இயங்குதள அப்டேட் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாடல் இன்று வெளியாகவுள்ளதால் உலகளவில் உள்ள ஆப்பிள் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். வரப்போகும் மாடலில் உள்ள புதிய அம்சங்கள் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஐபோன் 13 அறிமுக விழாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் பக்கத்தில் காணலாம். அதற்காக கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget