மேலும் அறிய

5G Service : ஐ போன் யூஸ் பண்றீங்களா..? அடுத்த வாரம் முதல் 5 ஜி சேவை..!

முதலில் iOS 16 பீட்டா மென்பொருள் திட்டத்தின் மூலம் Airtel மற்றும் Jio வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5G சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1ஆம் தேதி தொடக்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னை உள்பட எட்டு முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கத் தொடங்கியது.

ஸ்மார்ட்ஃபோன் யூசர்கள் பலரும் ஏற்கெனவே 5ஜி போன்களைக் கொண்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் தற்போது 5G மென்பொருளுக்கான அப்டேட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் குறிப்பிட்ட ஐபோன் பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

முதலில் iOS 16 பீட்டா மென்பொருள் திட்டத்தின் மூலம் Airtel மற்றும் Jio வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து டிசம்பரில் அனைத்து ஆப்பிள் பயனர்களுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் இந்தியா கூறியபடி, iPhone 14, iPh.one 13, iPhone 12 மற்றும் iPhone SE (ஜெனரேஷன் 3) மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் விரைவில் 5G மென்பொருள் அப்டேட்டைப் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உங்கள் ஃபோனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா? என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளவும்:

ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'செட்டிங்ஸ்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

ஸ்டெப் 2: அதில் ‘சிம் கார்டு & மொபைல் டேட்டா’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: 'சிம்'மைத் தேர்ந்தெடுக்கவும்

ஸ்டெப் 4: சிம் தகவல் மற்றும் அமைப்புகள் மெனுவின் கீழ் 'பிரிஃபெர்ட் நெட்வொர்க் டைப்' என்பதைச் சரிபார்க்கவும்.

ஸ்டெப் 5: அந்த ஆப்ஷனின் கீழ் 4ஜி, 3ஜி, 2ஜி என்று லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும். அதில் 5ஜி என்பது பட்டியலிடப்பட்டிருந்தால், உங்கள் சாதனம் 5ஜி சாதனம் ஆகும்.

ஏர்டெல் ஆப் மூலமும் கண்டறியலாம்

ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் ஆப்பை பயன்படுத்தியும் 5G மொபைலா என்பதை கண்டறியலாம். அப்டேட் செய்யப்பட்ட ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வைத்திருந்தீர்களேயானால், அதில் 5ஜி என்ற பெயர் தானாகவே இணைந்திருக்கும். அப்படி இருந்தால் உங்கள் பகுதியில் 5ஜி வந்துவிட்டதா என்று கண்டறிய அதிலேயே ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் அறிவிப்புகளில் இருந்து ‘Airtel 5G Plus live in india' என்னும் ஆப்ஷன் இருக்கும். அதனை பயன்படுத்தி உங்கள் பகுதியில் 5G இருக்கிறதா? என்பதை சரிபார்க்கலாம். Apple Realme, Xiaomi, Oppo, Vivo, OnePlus மற்றும் Samsung உள்ளிட்ட பிராண்டுகளில் எந்த போன் 5G சப்போர்டுடன் வருகிறது என்னும் போன்களின் பட்டியலை Airtel தேங்க்ஸ் ஆப் வழங்குகிறது, அதில் சென்றும் கண்டறியலாம்.

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget