iPhone 14 Series: கிட்னிய வித்தாதான் இத வாங்க முடியும்.... இணையத்தில் குவியும் ஐபோன் மீம்ஸ்!
தங்கள் கிட்னியை விற்று தான் இந்த ஐபோன்களை வாங்க முடியும் என்றும், முந்தைய ஐபோன் 13 மாடலின் அம்சங்களுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் பகிர்ந்து வருகின்றனர்.
வெகுநாள்களாக உலகமே பெரிதாக எதிர்பார்த்து காத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் நேற்று (செப்.07) மாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
வழக்கமாக ஆப்பிள் ஐபோன் சந்தையில் அறிமுகமாகும்போதெல்லாம் அதன் விலையை மையப்படுத்தி மீம்ஸ்கள் இணையத்தில் குவியும்.
#AppleEvent #iPhone14
— z (@scenethirtyone) September 7, 2022
Launching iPhone 14 when someone is still paying EMI of iPhone 13😂😂 pic.twitter.com/s2CIPtakR3
இந்த முறை ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைல்கள் ஐபோன் 14 சீரிஸில் வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்களை இந்த சீரிஸின் அனைத்து மாடல் போன்களைக் குறித்தும் மீம்ஸ்கள் பகிர்ந்து அதகளம் செய்து வருகின்றனர்.
iPhone 12, 13 & 14#AppleEvent #iPhone14 pic.twitter.com/4oAShIUdFk
— అరె థాయ్ (@KCube_3) September 8, 2022
ஐபோன் 14இன் தொடக்க விலை 79 ஆயிரத்து 900 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 பிளஸ் - ன் தொடக்க விலை 89 ஆயிரத்து 900 ரூபாயாகவும், ஐபோன் 14 புரோ-வின் தொடக்க விலை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபோன் 14 புரோ மேக்ஸ் -ன் தொடக்க விலை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 900 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
Iphone 13 owners buying the iphone14 #iPhone14 pic.twitter.com/ntRsNj9bZ6
— Tanmay⁶⁹ (@SirDinda_jr) September 7, 2022
டெக் உலகினர் இந்த ஐபோன்களின் அம்சங்களைப் புகழ்ந்து ஒருபுறம் சிலாகித்து வந்தாலும், மற்றொரு புறம் மக்கள் தங்கள் கிட்னியை விற்று தான் இந்த ஐபோன்களை வாங்க முடியும் என நெட்டிசன்கள் மீம்ஸ்கள் பகிர்ந்து வருகின்றனர்.
People who sold their kidneys to buy iphone 6 looking at #iPhone14Pro from heaven. pic.twitter.com/xp0ZQt4FyH
— - M A L I K (@ItsMallikk) September 1, 2022
மேலும் முந்தைய ஐபோன் 13 மாடலின் அம்சங்களுக்கும் இந்த அம்சங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவுமில்லை என்றும் சில இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
ஐபோன் 14 ரக செல்போன்கள் வரும் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதில் ஆப்பிளின் பல ஆண்டு திட்டமான செயற்கைக்கோள் அவசர அழைப்பு வசதி இடம்பெறுகிறது. இந்த வசதி இடம்பெறும் முதல் மொபைல் இது தான்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் 2 ஆண்டுகளுக்கு இச்சேவையை இலவசமாக பெற முடியும். அதுமட்டுமின்றி ஆப்பிள் இத்தனை ஆண்டுகள் செய்யாத நிறைய விஷயங்களை இதில் செய்துள்ளது. ஆப்பிள் மொபைலில் டிஸ்பிளேயில் மேலே கேமரா, ஸ்பீக்கர், சென்சார் இருக்கும் பகுதிகள் பெரிதாக இருக்கும்.
தற்போது வரும் ஆண்டராய்டு மொபைல்களை எல்லாம் பன்ச் ஹோல் டிஸ்பிளே என சிறிதாக மாற்ற ஆப்பிள் அதனை செய்யாமலேயே இருந்து வந்தது. தற்போது அதனை ஒரு சிறிய மாத்திரை வடிவில் கொண்டு வந்துள்ளது பார்ப்பதற்கு மேலும் அழகான லுக்கை கொடுக்கிறது.