Airtel | புது ஃபோன் வாங்குறீங்களா? ரூ.6ஆயிரம் கேஷ்பேக் தருது ஏர்டெல்.. இதுதான் முழு விவரம்!
புதுபோன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
புது ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.6000 கேஷ்பேக் வழங்கும் புதிய திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. புதுபோன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களை கவர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல கவர்ச்சிக்கரமான திட்டங்களையும், ஆஃபர்களையும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏர்டெல் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கேஷ்பேக் ஆஃபர். இந்த கேஷ்பேக் ஆஃபரின் படி உங்களுக்கு ரூ.6ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் இந்த கேஷ்பேக்கை பெற 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இதுதான் திட்டம்.!
ரூ.12ஆயிரத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த கேஷ்பேக்கை பெறலாம். இந்த திட்டத்திற்கு பொருந்தக்கூடிய 150 வகையான செல்போன் மாடல்களையும் ஏர்டெல் அறிவித்துள்ளது.
Samsung, Oppo, Realme, Nokia, Tecno, Lenovo, Motorola, Infinix, Vivo, Itel, Xiaomi, மற்றும் Lava போன்ற முன்னணி நிறுவனங்களில் செல்போன்கள் இந்த லிஸ்டில் அடங்கும்.அந்த குறிப்பிட்ட செல்போனை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு ரூ.249க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் அது கேஷ்பேக்காக வரும்.
அதேபோல தொடர்ந்து 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்தார் உங்களுக்கு ரூ.6 ஆயிரம் கேஷ்பேக் கொடுக்கப்படும். இந்த 6 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணையாக கொடுக்கப்படும். முதல் 18 மாதங்கள் ரிசார்ஜ் சரியாக செய்தால் உங்களுக்கு ரூ.2 ஆயிரம் கிடைக்கும். அடுத்து 18 மாதங்கள் முடிந்த பிறகு உங்களுக்கு ரூ.4000 கிடைக்கும்.
இந்த திட்டமானது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. நிறுவனம் வெளியிட்ட கேஷ்பேக் விதிகளுக்கு பொருந்தும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபரை பெறலாம். மேற்கொண்ட விவரங்களை ஏர்டெல் இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
இதற்கிடையே,இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான சோதனையை துவங்கி இருக்கின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் மற்றும் நாட்டின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சோதனையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5GHz பேண்ட் மூலம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
ஏர்டெல் 5ஜி சோதனையில் 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும்இதை உறுதி செய்யும் வகையில் ட்விட்டர் தளத்தில் வெளிவந்த வீடியோவில், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குவதாக விளம்பர படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்