Airtel | என்னென்ன கொடுக்குறாங்க பாருங்க.. ஏர்டெல்-ன் புதிய ரூ.456 ப்ளான்!
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் ரூ.456 ப்ளானை அறிமுகம் செய்துள்ளது
சினிமாவில் தல-தளபதி போல, நெட்வொர்க்கில் தல-தளபதி என்றால் அது ஜியோ-ஏர்டெல் தான். வாடிக்கையாளர்களை தன் வசமிழுத்து வரும் ஜியோவிடம் ஏர்டெல் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறது. மாதத்திற்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என ஓட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாளைக்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என இணையசேவையை அள்ளி வீசியது ஜியோ. தொடக்கத்தில் இலவசமாக சிம் கார்டுகளும் கொடுக்கப்பட்டன. ஜியோவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ந்த ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு ஏற்ப இண்டர்நெட் கொடுக்கத் தொடங்கின. அதேபோல் ஜியோ அடிக்கடி புதுப்புது ப்ளான்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. வேறு என்ன செய்ய முடியும்? போட்டியாளரான ஏர்டெலும் ஜியோவின் ப்ளானுக்கு இணையாக ப்ளான்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் தற்போது ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ப்ரீபெய்ட் ப்ளான் தான் ரூ.456.
60 நாளைக்கு 50 ஜிபி இண்டர்நெட் என்ற புதிய ப்ளானாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் அன்லிமிடெட் போன்கால் , ஒருநாளைக்கு 100 எஸ் எம் எஸ் போன்ற வசதிகளும் உண்டு. இது ஜியோவின் சமீபத்திய அறிமுகமான ரூ.447 ப்ளானுக்கு போட்டியாக கொண்டு வரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதே ஆஃபர்களையும் ஜியோ வழங்குகிறது. ஏர்டெல் ஒருபடி மேலே போய் செல்போனில் அமேசான் ப்ரைம் பயன்படுத்தும் ஆப்ஷனையும் தருகிறது.
Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!
என்னென்ன இருக்கு?
ரூ.456 ஏர்டெல் ப்ளானை பொருத்தவரை 60 நாளுக்கு 50ஜிபி இண்டர்நெட். அன்லிமிடெட் போன்கால் , ஒருநாளைக்கு 100 எஸ் எம் எஸ் உண்டு. அமேசான் ப்ரைமை 30 நாள் ஃப்ரீ ட்ரைலாக பயன்படுத்தலாம். அதுமட்டுமல்ல, Airtel Xstream Premium, விங்க் மியூசிக்கும் பயன்படுத்தலாம்.இலவசமாக ஹலோடியூனும் வைத்துக்கொள்ளலாம். இந்த ரீசார்ஜுக்கு மேலும் பலனாக பாஸ்டேக் ரீசார்ஜ் செய்தால் ரூ.100 கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது.
கடும் போட்டி காரணமாக நெட்வொர்க் நிறுவனங்கள் பல ப்ளான்களை அறிமுகம் செய்து வருகின்றன. மிக விரைவில் 5ஜி சேவையும் அறிமுகமாகவுள்ளதாக ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சோதனையையும் தொடங்கிவிட்டன. ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5 GHzபேண்ட் மூலம் 5ஜி சோதனையை தொடங்கியுள்ளது. சோதனை தொடர்பான ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த சோதனையில் 1 Gbps டவுன்லோட் வேகமும், 100Mbps அப்லோட் வேகத்தையும் ஏர்டெல் வழங்கி ஆச்சரியத்தை கொடுத்தது. அதேபோல் ஜியோவும் தன்னுடைய 5ஜி சோதனையை தொடங்கிவிட்டது. இதற்கிடையே 4k வசதிகொண்ட செட்டாப் பாக்ஸுடன் போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தான் யூடியூப்: நெருப்பை கொடுத்து சமைக்கச் சொல்லும் டெக்னாலஜி; கொளுத்த நினைத்தால்...?