மேலும் அறிய

Aadhaar | உஷார்.! ஆதார் எண்ணை வைத்து நடக்கும் மோசடிகள்.. தடுப்பதற்கான சிறந்த வழி இதுதான்.!

அனைத்து இடங்களிலும் ஆதார் உள்ள நிலையில் இதனைப்பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வி மக்களிடையே எழத்தொடங்கிவிட்டது.

ஆதார் எண்ணின் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுவரும் நிலையில் அதனைத்தடுக்கும் விதமாக மாஸ்க் ஆதாரை மக்கள் பயன்படுத்தலாம் என UIDAI தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது ஆதார். இன்றையச் சூழலில் தடுப்பூசி போடுவது தொடங்கி,குழந்தைகளை பள்ளிக்குச்சேர்ப்பது, வங்கிக்கணக்கு துவங்குவது, ரேசன்கார்டு பதிவு செய்ய, வீடு வாங்குவது அல்லது தவணை முறையில் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் ஆதார் எண் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. அந்தளவிற்கு இதன் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. இப்படி இன்றியமையாத ஒன்றாக இருக்கும் நிலையில் இந்த 12 இலக்க எண்களை வைத்து பல மோசடிகளும் அவ்வப்போது அரங்கேறிவருகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்ளில் நம்முடைய ஆதார் உள்ள நிலையில் இதனைப்பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வி மக்களிடையே எழத்தொடங்கிவிட்டது. இதனையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் தான், மாஸ்க் ஆதார் என்ற வசதியை பெற ஆதார் ஆணையம் அனுமதிக்கிறது. அப்படின்னா என்ன என்ற சந்தேகம் நிச்சயம் வரக்கூடும்.

  • Aadhaar | உஷார்.! ஆதார் எண்ணை வைத்து நடக்கும் மோசடிகள்.. தடுப்பதற்கான சிறந்த வழி இதுதான்.!

எனவே முதலில் மாஸ்க் ஆதார் என்றால் என்ன? என தெரிந்துக்கொள்வோம்.

ஆதார் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையில் 12 இலக்க ஆதார் எண் வெளிப்படையாக இருக்கும். ஆனால் மாஸ்க் ஆதாரில் 12 இலக்க எண்களில் சில எண்களை மறைக்கப்பட்டிருக்கும். எனவே நம்முடைய ஆதாரை தேவையின்றி யாரும் பயன்படுத்தாமல் இந்த மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

இந்த மாஸ்க் ஆதாரை, ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் டவுன்லோடு செய்து பயன்படுத்தமுடியும்.  இதில் பிறந்த தேதியையும் மறைத்து டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இதனை அனைத்து பொது இடங்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் ஒருவேளை அதிகாரிகள் இதனை வாங்க மறுக்கும் பட்சத்தில் ஆதார் ஆணையத்தின் புகார் அளிக்கலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கு இத்திட்டம் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நம்முடைய பாதுகாப்பு கருதி எப்படி மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்யும் முறையை இங்கே அறிந்துக்கொள்வோம்.

 மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்யும் முறை:

முதலில்  ஆதார் ஆணையத்தின் uidai.govi.in  அல்லது eeadhaar.uidia.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

பின்னர் download Aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதனையடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண், பெயர் மற்றும் பின்கோடு ஆகியவற்றை என்ட்ரி செய்துக்கொள்ள வேண்டும்.

  • Aadhaar | உஷார்.! ஆதார் எண்ணை வைத்து நடக்கும் மோசடிகள்.. தடுப்பதற்கான சிறந்த வழி இதுதான்.!

அதேப்பக்கத்தில், உங்களுக்கு download Aadhar or masked Aadhar என்ற இரு ஆப்சன் இருக்கும். நீங்கள் masked Aadhar என்பதை தேர்வு செய்ய வேண்டும். கேப்சா குறயீட்டை உள்ளீடு செய்துக்கொள்ள வேண்டும்.

பின், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP  அனுப்பப்படும். இதனை அதற்கான இடத்தில் டைப் செய்து மாக்ஸ் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.

தற்போது நம்முடைய 12 இலக்க ஆதார் எண்ணைப்பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெற்றுவரும் நிலையில் அதிலிருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்வது அவசியமான ஒன்று. எனவே மேற்கண்ட வழிமுறையைப்பயன்படுத்தி இனி நாமும் மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்து பயன்படுத்த தொடங்குவோம்.

தலைப்பு செய்திகள்

ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget