premium-spot

Aadhaar Mobile Number Change: ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றலாம்? தெரிஞ்சிக்கோங்க

ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

Advertisement

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு, ஆதார் மூலம் பொதுவான அடையாள எண் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு மூலம் வங்கி கணக்கு, ஓட்டுநர் உரிமம், சிம் கார்டு, சில இடங்களில் அடையாள அட்டையாகவும் உள்ளிட்ட பல்வேறு சேவைக்காக பயன்படுகிறது.

Continues below advertisement

ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இந்நிலையில், நம்முடைய மொபைல் எண்ணை மாற்றும் தருணம் ஏற்படும் போது, ஆதார் மூலம் சேவைகள் பெறுவதில் தடை ஏற்படும். அதனால் ஆதார் கார்டில், புதிய மொபைல் எண்ணை பதிவு செய்த பிறகே ஆதார் சேவைகளை தடையின்றி பெற முடியும்.

தற்போது, ஆதார் கார்டில் புதிய மொபைல் எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Continues below advertisement
  1. முதலில்https://www.uidai.gov.in/ta/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். 
  2. என் ஆதார்/ My aadhar என்பதை கிளிக் செய்து, அதில் பதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார்  Update Aadhaar at Enrolment/Update Center என்பதை கிளிக் செய்யவும்.
  3. state அல்லது district அல்லது பின் கோடை கிளிக் செய்து தேர்வு செய்து, உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை அறிந்து கொள்ளவும்.
  4. ஆதார் மையத்துக்கு சென்று update ஃபார்மை பூர்த்தி செய்ய வேண்டும்
  5. update ஃபார்மை பெற ரூ.50 ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
  6. update ஃபார்மை சமர்ப்பித்த பிறகு, அதற்கான உறுதிச் சீட்டு மற்றும் ட்ராக் எண் வழங்கப்படும்
  7. ட்ராக் எண் மூலம், மொபைல் எண் மாற்றுவது தொடர்பான நிலையை தெரிந்து கொள்ளலாம்.
  8. ஆதாரில் 90 நாட்களில் மொபைல் எண் மாற்றப்பட்டு விடும்.


Aadhaar Mobile Number Change: ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றலாம்? தெரிஞ்சிக்கோங்க

ஆதார் தொடர்பான கூடுதல் தகவல்கள்:

மாஸ்க் ஆதார் கார்ட் முதல் எட்டு இலக்கங்களை மறைத்து, கடைசி நான்கு இலக்கங்களைக் காட்டுவதன் மூலம் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது. மாஸ்க்  செய்யப்பட்ட ஆதார் எண் என்பது ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களுக்குப் பதிலாக “xxxx-xxxx” போன்ற சில குறியீடுகளுடன் வரும்.டைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். இதனை பயன்படுத்தினால் பாதுகாப்பாக உங்களது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என  UIDAI  தெரிவித்துள்ளது. 

மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டினை UIDAI வலைத்தளம் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதற்கு கீழ்க்கண்ட படிநிலைகளை பின்பற்றினால் போதுமானது.

படி 1 : myaadhaar.uidai.gov.in க்குச் சென்று  'Login'  வசதியை க்ளிக் செய்யவும்.

படி 2 : உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை கொடுத்த பிறகு , Send OTP என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

படி 3 : உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.அதனை பதிவு செய்து  'Login'  வசதியுடன் உள்நுழைய வேண்டும். 

படி 4: அதன் பிறகு  'Services' என்ற வசதியிற்குள் சென்று  'Download Aadhaar' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

படி 5 : Review your Demographics Data பிரிவின் கீழ் உள்ள  'Do you want a masked Aadhaar?'  என்னும் வசதியை க்ளிக் செய்யுங்கள்.

படி 6 : தன் பிறகு  "Download." என்னும் வசதியை பயன்படுத்தி , புதிய மாஸ்க்ட் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

படி 6 : PDF வடிவத்தில் உங்களது மாஸ்க்ட் ஆதார் கார்ட் கிடைத்துவிடும்.

படி 7 : உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களை (ஆதாரில் உள்ளதைப் போல) கேபிடல் எழுத்துக்களிலும், உங்கள் பிறந்த ஆண்டையும் YYYY வடிவத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட PDF மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கோப்பைத் திறக்கலாம்.

Also read: Govt Subsidy: ஆதார் இல்லாவிட்டாலும் அரசின் சலுகைகளை பெறலாம்! வழிமுறைகள் என்ன?

Continues below advertisement

முக்கிய செய்திகள்

மேலும் காண
Hello Guest

பர்சனல் கார்னர்

Formats
Top Articles
My Account
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Embed widget
Game masti - Box office ke Baazigar