மேலும் அறிய

Govt Subsidy: ஆதார் இல்லாவிட்டாலும் அரசின் சலுகைகளை பெறலாம்! வழிமுறைகள் என்ன?

 எந்த ஒரு நபரிடமும் ஆதார் இல்லை என்றாலும் கூட அரசின் நலத்திட்டங்கள் உதவிகள்  கண்டிப்பாக வழங்க வேண்டும்

கடந்த வாரம்  ஒன்றிய அரசு  மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்  தனிப்பட்ட  எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆதார் இல்லை என்றாலும் கூட அரசின் நலத்திட்டங்கள் உதவிகள்  கண்டிப்பாக வழங்க வேண்டும்  என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் சட்டத்தின் பிரிவு 7 இல் தற்போதுள்ள விதியை குறிப்பிட்டுள்ளது.

“இவ்வாறு மேற்கூறிய பின்னணியில் மற்றும் சட்டத்தின் பிரிவு 7 இன் விதியை கருத்தில் கொண்டு,ஒரு தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை என்றால், அந்த ஆணிற்கோ அல்லது பெண்ணிற்கோ அல்லது திருநங்கைக்கோ ஆதார் பதிவுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்க்கு  ஆதார் எண்  ஒதுக்கப்படும்.
இப்படி விண்ணப்பித்த பின் விண்ணப்பதாரருக்கு  ஆதார் கிடைக்கும் வரை ஆதார் பதிவு அடையாள (EID) எண் அடிப்படையாகக் கொண்டு மானியங்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் வாயிலாக கிடைக்கும் உதவிகள் என அனைத்தும் பெற முடியும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

இவ்வாறான நிலையில் மேலும் இந்திய ஒன்றிய அரசுகளால் வழங்கப்பட்டிருக்கும் ஏனைய அடையாள அட்டைகளைக் கொண்டும் இத்தகைய மத்திய மாநில அரசுகளின் நிதி உதவிகள் மானியங்கள் உதவி பொருட்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

இதைப்போல மத்திய அரசின், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தேர்தல் அடையாள அட்டையை கொண்டும் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவிகளை பெறலாம்.

மேலும் மத்திய அரசின் வருமான வரித்துறை அளித்துள்ள வருமானவரித் துறையின் அடையாள அட்டை அதாவது பேன் கார்டை வைத்தும் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவிகள் மானியங்கள் மற்றும் ஏனைய உதவிகளையும் பெறலாம்.

Govt Subsidy: ஆதார் இல்லாவிட்டாலும் அரசின் சலுகைகளை பெறலாம்! வழிமுறைகள் என்ன?

இதைப் போலவே பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்ணை வைக்கும் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் நிதி உதவிகளை பெறலாம்

மத்திய அரசின் அஞ்சல் துறை  அளித்துள்ள புகைப்படத்துடன் கூடிய  இருப்பிட  அஞ்சலக அடையாள அட்டையை  கொண்டும் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவிகளை பெறலாம். இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988 (59 இன் 1988) இன் கீழ் உரிமம் வழங்கும் ஆணையத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் கொண்டும் அரசின் உதவிகளை பெறலாம்.

இதே போலவே மாநில அரசுகள் அனுமதித்திருக்கும் ரேஷன் கார்டு மற்றும் ஏனைய அடையாள அட்டைகளைக் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் நிதி உதவிகளை பெற முடியும்

கெஸட் ஆபிஸர் என்று அழைக்கப்படும் அதிகாரிகள் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய ஒப்புகை சீட்டைக் கொண்டும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவி பெறலாம் . இதைப் போலவே தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய ஒப்புகைச் சீட்டைக் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவிகள்  மானியங்கள் இவற்றை பெறலாம் என்று  குறிப்பிட்டிருக்கிறது.

இத்தகைய ஆதார் சட்டம், 2016 பிரிவு 7ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் தனிநபருக்கு ஆதார் ஒதுக்கப்படும் வரை, மானியங்கள், பலன்கள் அல்லது சேவைகள் அத்தகைய நபர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். 

நாடு தழுவிய அளவில் ஆதார் கார்டை அனைவருக்கும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.இதற்கு முன்னர் கூட பான் கார்டுடன் ஆதார் எண்ணைய் மத்திய அரசு இணைக்கச் சொல்லி நாம் அனைவரும் இணைத்து இருக்கிறோம்.  அதைப்போலவே தற்போது பாஸ்போர்ட் எடுக்கும் நடைமுறையிலும் நமது பாஸ்போர்ட்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு தனிநபரும் ஆதார் கார்டை வங்கிக்கு  சமர்ப்பித்து வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள்.
தற்சமயம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இன்னும் சற்று ஏற குறைய 10 வருடங்களுக்குள்ளாக இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் அடையாள அட்டை கண்டிப்பாக கிடைத்துவிடும். இதற்குப் பிறகு வரும் தலைமுறையினருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல பயன்படுத்தும் அடையாள அட்டையான பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் பையில் ஒரே ஒரு ஆதார் கார்டு அட்டை என இரண்டு மட்டுமே இருக்கும். 

தற்போது நடைமுறையில் இருக்கும் டிரைவிங் லைசன்ஸ்,ஓட்டர் ஐடி,வங்கிக் கணக்கு எண் மற்றும் வருமான வரித்துறை அளித்திருக்கும் பான் கார்டு என எந்த அடையாள அட்டைகளும் தேவைப்படாமல் ஆதார் ஒன்று மட்டுமே அனைத்துக்கும் மாற்றாக விளங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget