இது தாஜ்மகாலை விடப் பெரிசு! - பூமியை நோக்கி வரும் எரிகல்.. எச்சரிக்கும் நாசா..
உலகின் மிகப்பெரிய அணுகுண்டான ரஷ்யாவின் ஜார் பம்பாவைவிட 3.33 மடங்கு அதிக வெப்ப ஆற்றலை இந்த எரிகல் வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தாஜ்மகாலை விடப் பெரிய அளவிலான எரிகல் ஒன்று விண்கல் பூமியின் வட்டப்பாதையை நோக்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் பிக் பெண் கடிகாரத்தை விட இரண்டு மடங்கு பெரிய இந்தக் கல் சுமார் 430 அடி உயரம் கொண்டது. இது பூமியின் வட்டப்பாதையை நோக்கித் தற்போது நகர்ந்துகொண்டிருப்பதாக அதனைக் கண்காணிக்கும் நாசா தெரிவித்துள்ளது. இது மோதும் நிலையில் வெளிப்படும் ஆற்றல் அணு ஆயுதத்தை விட பலமடங்கு இருக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அணுகுண்டான ரஷ்யாவின் ஜார் பம்பாவைவிட 3.33 மடங்கு அதிக வெப்ப ஆற்றலை இந்த எரிகல் வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.1994WR12 என இந்த கல் பெயரிடப்பட்டுள்ளது. 1994ல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது உடனடியாக இந்தக் கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பூமிக்கு மிக அருகில் மட்டும் இது தற்போது பயணித்துச் செல்லும் என்றும் நாசா கணித்துள்ளது.
Watch Falcon 9 launch @NASA’s DART mission – humanity’s first planetary defense test to redirect an asteroid https://t.co/bJFjLCzWdK https://t.co/XMKYOGAjbB
— SpaceX (@SpaceX) November 24, 2021
பூமியை நோக்கி வரும் எரிகல்லை விண்கலம் கொண்டு தகர்க்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டுவருவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டார்ட் மிஷன் என நாசா இதற்குப் பெயரிட்டிருந்தது.
View this post on Instagram