Passport Renewal 2024: உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதா? புதுப்பிக்க ரொம்ப ஈஸியான வழிகள்.. இதை படிங்க!
பாஸ்போர்ட்டை ஆன்லைனில் எப்படி புதுப்பிப்பது? கட்டண விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
வெளிநாடு பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாளச் சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும். எனவே, ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்று.
பாஸ்போர்ட் புதுப்பித்தல்:
பாஸ்போர்ட் என்பது மற்ற ஆவணங்களை போலவே ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் காலம் இருக்கும். எனவே, பாஸ்போர்ட் காலாவதி தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட்டை பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகிவிடும். எனவே, மூன்று வருடத்திற்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாவது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது.
சிறார்கள் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதேபோல, 15 வயது முதல் 18க்கும் வயதுக்குட்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். எனவே, இந்த பாஸ்போர்ட் புதுப்பித்தலை எப்படி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி?
- முதலில் www.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையத்திற்கு சென்று புதுப்பித்தலுக்கு பதிவு செய்ய வேண்டும்.
- ஏற்கனவே, இந்த இணையத்தில் பதிவு செய்து இருந்தால் நேரடியாக பயனர் உள்நுழைவு என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உள்நுழையலாம்.
- முன்னதாக, நீங்கள் பதிவு செய்யாவிட்டால், புதிய பயனர் பகுதிக்கு சென்று பதிவு செய்ய கணக்கை உருவாக்க வேண்டும்.
- இதனை அடுத்து, பெயர், பிறந்த தேதி, முகவரி போனற் அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும்.
- சுய விவரங்களை சமர்பித்த பிறகு, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை செலுத்தி சந்திப்பு தேதியை திட்டமிட வேண்டும்.
- பாஸ்போர்ட் சேவை இணையத்திற்கு சென்று சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப ஆப்ஷனை கிளிக் செய்து, சந்திப்பு (Appointment) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர், திரையில் தோன்றும் தேதிகளிலிருந்து வசதியான ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்து, பணம் செலுத்தி, அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அப்பாயிண்ட்மெண்ட தேதி உங்கள் இமெயிலுக்கு வரும்.
பாஸ்போர்ட் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பப் படிவத்துடன் கூடுதலாக ஒருசில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, அசல் பழைய பாஸ்போர்ட், பாஸ்போர்ட்டின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல், எமிக்ரேஷ்ன் காசோலை தேவை அல்லாது பக்கத்தின் சுய - சான்றளிக்கப்பட்ட நகல் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டண விவரங்கள்:
10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1500 ஆகும். 10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போட்டுக்கான கட்டணம் ரூ.2,000 ஆகும். நீங்கள் அடிக்கடி பயணிக்கும் நபராக இருந்தால் 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டை பெறுவது நல்லது. இல்லையென்றால் 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளலாம். 5 ஆண்டுகள் செல்லுப்படியாகும் சிறார்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் கட்டணம் ரூ. 1,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.