இண்டர்நெட் சேவை பெற சொத்தை எழுதி தர வேண்டும்; அந்த 10 நாடுகள் எவை?

இணையதள சேவையை பெற சில நாடுகளில் இன்னும் மக்கள் அதிகமாக செலவு செய்து வருகின்றனர்.  எந்தெந்த நாடுகள் அவை?

டிஜிட்டல் உலகத்தில் இணையதளம் இல்லாமல் ஒரு அசைவும் இருக்க முடியாது. அனைவருக்கும் இணையதள சேவை ஒரு அடிப்படை உரிமை என்று பல நாடுகள் கொடுத்து வருகின்றன. அந்த அளவிற்கு முக்கியமான இணையதள சேவையை பெற சில நாடுகளில் இன்னும் மக்கள் அதிகமாக செலவு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் இணையதள சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் 10 நாடுகள் எவை?

எரித்திரியா: 

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எரித்திரியா. இங்கு ஒரு இணையதள சேவை பேக்கிற்கு சராசரியாக $2666.24 என்ற செலவு ஆகிறது. மேலும் ஒரு எம்பி டேட்டாவிற்கு இங்கு $1590.75 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மவுரித்தேனியா:

வட ஆப்பிரிக்க நாடான மவுரித்தேனியா. எரித்திரியாவிற்கு பிறகு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடு இது தான். இங்கு ஒரு இணையதள பேக்கிற்கு $712.46 ஆக உள்ளது. மேலும் ஒரு எம்பி டேட்டாவிற்கு $125.57 என்ற கட்டணம் உள்ளது. 

காம்ரோஸ்:

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கிறது காம்ரோஸ் தீவுகள். இங்கு ஒரு இணையதள பேக்கிற்கு $414.01 கட்டணமாக உள்ளது. இதுவே ஒரு எம்பி டேட்டாவிற்கு $152 ஆக உள்ளது. இண்டர்நெட் சேவை பெற சொத்தை எழுதி தர வேண்டும்; அந்த 10 நாடுகள் எவை?

புருண்டி:

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் மற்றொரு நாடு புருண்டி. இங்கு ஒரு இணையதள பேக்கிற்கு $370  கட்டணமாக உள்ளது. இதுவே ஒரு எம்பி டேட்டாவிற்கு $100 ஆக உள்ளது. 

மக்காவ்: 

சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு மக்காவ். இங்கு ஒரு இணையதள பேக்கிற்கு $307 ஆக உள்ளது. இங்கு ஒரு எம்பி டேட்டாவிற்கு $30.03ஆக கட்டணம் உள்ளது. 

கானா:

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் நாடு கானா. இங்கும் இணையதள சேவைக்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒரு பேக்கிற்கு $254.25 மற்றும் ஒரு எம்பி டேட்டாவிற்கு $23.03ஆக உள்ளது. 

சமோவா:

வடக்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு சமோவா. இங்கு இணையதள சேவைக்கு ஒரு பேக்கிற்கு $192.84 மற்றும் ஒரு டேட்டாவிற்கு $1.93ஆக கட்டணம் உள்ளது. இண்டர்நெட் சேவை பெற சொத்தை எழுதி தர வேண்டும்; அந்த 10 நாடுகள் எவை?

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்:

கரிபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் நாடு பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள். இங்கு இணையதள சேவைக்கு ஒரு பேக்கிற்கு $179.00 மற்றும் ஒரு எம்பி டேட்டாவிற்கு $1.93ஆக கட்டணம் உள்ளது. 

கேமேன் தீவுகள் :

கரிபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் மற்றொரு பிரிட்டிஷ் கட்டுபாட்டில் உள்ள தீவு நாடு கேமேன் தீவுகள். இங்கு இணையதள சேவைக்கு ஒரு பேக்கிற்கு $170 ஆக உள்ளது. 

துருக்மேனிஸ்தான்:

மத்திய ஆசியாவில் அமைந்திருக்கும் நாடு துருக்மேனிஸ்தான். இங்கு இணையதள சேவைக்கு ஒரு பேக்கிற்கு $164.80 ஆக கட்டணம் உள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரை குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் நாடுகளில் 20ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு இணையதள பேக்கிற்கு $13.58 ஆக உள்ளது. மேலும் இந்தியாவில் ஒரு எம்பி டேட்டாவிற்கு $0.39 கட்டணமாக உள்ளது. உலகளவில் இணையதள சேவைக்கு மிகவும் குறைவாக கட்டணம் வசூலிக்கும் நாடாக உக்கிரேன் உள்ளது. அங்கு ஒரு பேக் $6.41 மற்றும் ஒரு எம்பி டேட்டா $0.05 கட்டணங்களாக உள்ளது. 

Tags: india Internet Costs high costs per MBPS Data Eriteria mobile data

தொடர்புடைய செய்திகள்

Poco M3 Pro 5G Launch | போக்கோ எம்3 ப்ரோ 5G ; இந்தியாவில் இன்று விற்பனை துவக்கம்!

Poco M3 Pro 5G Launch | போக்கோ எம்3 ப்ரோ 5G ; இந்தியாவில் இன்று விற்பனை துவக்கம்!

GO1 ROBO DOG | பல்டி அடிக்கும், செல்ல ரோபோ நாய் ! விலை எவ்வளவு தெரியுமா?

GO1 ROBO DOG | பல்டி அடிக்கும், செல்ல ரோபோ நாய் ! விலை எவ்வளவு தெரியுமா?

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி.

BREAKING: சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி.

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

Tamil Nadu Coronavirus LIVE News :  தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!