மேலும் அறிய

Sports Year Ender: முன் செல்லடா முன்னே செல்லடா! பண்ட் முதல் பாண்டியா வரை.. 2024-ன் சிறந்த கம்பேக்

Sports Year Ender: 2024 ஆம் ஆண்டில் பல விளையாட்டு வீரர்கள் மற்றும்  விளையாட்டு அணிகளின் கம்பேக்கை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 

ஒரு விளையாட்டு வீரர் அல்லது விளையாட்டுக் அணியாக  இருப்பது  என்பது போட்டிகளை வெல்வது மட்டுமல்ல.  கடினமான சூழ்நிலைகளில் உங்களை எப்படி சமாளிப்பது என்பதும், அது பல நேரங்களில் பலருக்கும் ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்காலம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பல விளையாட்டு வீரர்கள் மற்றும்  விளையாட்டு அணிகளின் கம்பேக்கை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 

ரிஷப் பண்ட்:

இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பந்த், 2022 டிசம்பரில் டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு கார் ஓட்டிச் சென்ற போது  பயங்கர விபத்தில் சிக்கினார். இதான் காரணமாக பலத்த காயமடைந்தார், இதனால் அவர் காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்து 2023 ஆம் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமல் இருந்தார், 2024 ஆம் ஆண்டில் காயத்தில் இருந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார்.

பண்ட் ஐபிஎல் 2024 இல் ஐபிஎல்லில்  டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தினார். 2024 ஐபிஎல் சீசனில் , 13 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் மூன்று அரைசதங்களுடன் 446 ரன்கள் எடுத்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி:

ஒரு காலத்தில் எப்படி இருந்த பங்காளி நீ என்று கேட்கும் அளவிற்கு இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் தொடரில் படுமோசமாக விளையாடி வருகிறது. 2011 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி  வரை சென்ற அணி, 2014 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற அணி சீனியர் வீரர்கள் வீரர்கள் பலர் ஓய்வு பெற்றதால் சர்வதேச கிரிக்கெட்டில் மிக மோசமாக விளையாடி வந்தது. பல கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றிய போதும் அணியில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா இலங்கை அணிக்கு பயிற்சியாளராக வந்தார். 

முதலில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் அடுத்து வந்த ஒரு நாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்றது, இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி வென்றது. அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி வென்றிருந்தது. இந்த வருடத்தில் இலங்கையின் சிறந்த ஆண்டாக அமைந்தது. 

இதையும் படிங்க: IND vs AUS; மன வலிமை, பொறுமை! டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையை மறக்கிறதா இந்தியா?

ஹர்திக் பாண்டியா:

இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்டியாவுக்கு  கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கசப்பான மாதங்களாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக  நியமிக்கப்பட்டார். ஆனால் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது சொந்த அணி ரசிகர்கள் அவரை மைதானத்தில்  வைத்து அவரை அவமதித்துக்கொண்டே வந்தனர், மறுபுறம் மும்பை அணியின் சீனியர் வீரர்கள் அவரை மறைமுகமாக சாடி வந்தனர், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. 

இது ஒருபுறம் இருக்க பாண்டியாவின் சொந்த வாழ்விலும் இடி இறங்கியது, பாண்டியாவுக்கும் அவரது மனைவியும் தங்கள் திருமண வாழ்வை முறித்துக்கொண்டனர், இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. இப்படிப்பட்ட மனநிலையுடன் டி20 உலகக்கோப்பையில் களமிறங்கினார் ஹர்திக் பாண்டியா , அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை பாண்டியா வெளிப்படுத்தினார். இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியின் பரபரப்பான இறுதி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார், சிறப்பாக பந்து வீசிய பாண்டியா கடைசி ஓவர்ல் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். 

இதையும் படிங்க: Rohit Sharma: ”நான் கிளம்புறேன்” - டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித் சர்மா? கடைசி போட்டி எங்கு?

இரண்டு மாத காலமாக விளையாட்டிலும், சொந்த வாழ்க்கையிலும்  பெரிய மன உளைச்சலுக்கு ஆளானலும் தன்மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கம்பேக் யாரலையும் மறக்க முடியாது, முதல் எட்டு ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியுடன் இருந்த ஆர்சிபி அணி எப்படியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் அடுத்த ஆறு போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. குறிப்பாக மே 18 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தினால் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற நிலையில் அந்த போட்டியில் சென்னை அணிய 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது மட்டுமில்லாமல் சென்னை அணியையும் தொடரில் இருந்து வெளியேற்றியது.  

வினேஷ் போகத்:

30 வயதான வினேஷ் போகத்  பாரிஸ் 2024 இல் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக அதிக எடை காரணமாக வெள்ளியை தவறவிட்டார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பல மாதங்களாக தெருக்களில் போராட்டம் நடத்தியும், நீண்ட காலம் பயிற்சியில் இருந்து விலகி இருந்த போதிலும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியி டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற யுய் சுசாகியை தோற்கடித்து அசத்தி இருந்தார். ஆனால் தகுதி நீக்கம் அவரை பெரிய அளவில் பாதித்த நிலையில், அவர் அரசியலில் இறங்கி, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் வெற்றி பெற்றார். பல பெண்களுக்கு வினேஷின் இந்த பயணம் ஒரு சிறந்த பயணமாக இருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
New Year 2025:
New Year 2025: "இருங்க பாய்" மொமண்டில் கம்பேக் கொடுக்கனுமா? 2025ல் இதை மட்டும் பண்ணுங்க!
Embed widget