மேலும் அறிய

Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்

தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டி சென்றுவிட்டு, மீண்டும் குறைய ஆரம்பித்ததால், பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், இப்போது தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் வலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், எதிர்பார்க்கப்பட்டபடியே ஒரு லட்சம் ரூபாயை சமீபத்தில் கடந்தது. ஆனால், அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனால் சற்று நிம்மதி அடைந்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிய தங்கம்

தங்கத்தின் விலை கடந்த 15-ம் தேதி ஒரு லட்சம் ரூபாயை எட்டிப்பிடித்து, பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அன்று, ஒரு கிராம் 12,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 120 ரூபாயாகவும் விற்பனையானது.

ஆனால், அதன் பிறகு விலை குறையத் தொடங்கிய நிலையில், 16-ம் தேதி ஒரு கிராம் 12,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 98,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 17-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

18-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,520 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 19-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 12,380 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், வார இறுதியில் சற்று விலை உயர்ந்து, 20 மற்றும் 21-ம் தேதிகளில், ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும் விறபனை செய்யப்பட்டது. இந்த சூழலில் தான், இன்று மீண்டும் விலை உயர்ந்து, ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 80 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,480 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி, சவரனுக்கு 640 ரூபாயை விலை உயர்ந்து, ஒரு சவரன் 99,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உச்சம் தொட்ட வெள்ளியின் விலை

இதேபோல், வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 15-ம் தேதி கிராம் 215 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி, 16-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 211 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

17-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 11 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 222 ரூபாய்க்கு எகிறியது. அதைத் தொடர்ந்து, 18-ம் தேதியும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 224 ரூபாயை எட்டியது.

இந்நிலையில், 19-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 221 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், வார இறுதியில் மீண்டும் 5 ரூபாய் விலை உயர்ந்து, 20 மற்றும் 21-ம் தேதிகளில், ஒரு கிராம் 226 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், இன்று மீண்டும் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 231 ரூபாய் என்ற உச்ச விலையை வெள்ளி அடைந்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget