TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
TVK VIJAY: தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 70 தொகுதிகளில் டெபாசிட் இழப்பது உறுதி என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தலுக்காக காத்திருக்கும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும், எதிர்கட்சியான அதிமுகவிற்கும் டப் பைட் கொடுக்க களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியவர், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி இந்தியாவையே திரும்பிபார்க்க வைத்தார். அடுத்தாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தினார். இதில் எதிர்பாராத விதமாக கரூரில் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் மூச்சு திணறி 41 பேர் உயிரிழந்தனர்.
திராவிட கட்சிகளுக்கு டப் கொடுக்கும் விஜய்
இந்த சம்பவத்தில் தவெக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில், சுமார் 72 நாட்களுக்கு பிறகு மீண்டும் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் விஜய் கலந்துகொண்டார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் பிரம்மாண்ட கூட்டத்தை நடத்தினார். விரைவில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 70 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
’தவெக 70 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்’
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோட்டில் விஜய் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் திமுக- தவெகவிற்கு இடையே தான் போட்டி என பேசியிருந்தார். இப்படி ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் விஜய் ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அந்த ஈரோடு கூட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. தவெக என்ற கட்சியை பொறுத்தவரை அது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தை போல் தான் செயல்பட்டு கொண்டுள்ளது. எனவே கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக டெபாசிட் இழக்கும் என தெரிவித்தார்.
திமுவின் திட்டம் தான் விஜய்யின் அரசியல்
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் டூல் கிட்டாகதான் ஜோசப் விஜய் அங்கு செயல்பட்டு கொண்டு வருகிறார். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்காகவும், சீர்குலைப்பதற்காகவும், வாக்குகளை பிரிப்பதற்காகவும் திமுக ஒரு நடிகரை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி ஆரம்பிக்கும். அப்படி தான் இந்த முறை நடிகர் விஜய்யை வைத்து தொடங்கப்பட்டுள்ளது. திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும் என்பதற்காக இத்தகைய ஒரு ஸ்டேர்ஜி வைத்து சில கிருஸ்தவ நிறுவனங்களுடன் இணைந்து இன்று ஜோசப் விஜய் இன்னொரு மக்கள் நீதி மையமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு தொகுதியில் கூட விஜய்க்கு ஓட்டு கிடைக்காது
வரும் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தவெக விஜய் மீண்டும் திமுகவுக்கு சென்று விடுவார். எனவே விஜய்யின் இரட்டை வேடத்தை இந்த கொங்கு பகுதி மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். எனவே ஒரு தொகுதியில் கூட தவெக விஜய் ஓட்டு வாங்க முடியாது என்று அர்ஜுன் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்தார்.





















