(Source: ECI/ABP News/ABP Majha)
Sundar Pichai: கிரிக்கெட் ரசிகர் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை.. நேற்றைய மேட்ச்தான் ஹாட் டாபிக்
Sundar Pichai: ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sundar Pichai: ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி-20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய விராட்கோலி 82 ரன்கள் விளாசி அசத்தினார். இது கிரக்கெட் ரசிகர்கள் மத்தியில் தீபாவளி பரிசாக கொண்டாடி வருகின்றனர். இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலியை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சக அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Happy Diwali! Hope everyone celebrating has a great time with your friends and family.
— Sundar Pichai (@sundarpichai) October 24, 2022
🪔 I celebrated by watching the last three overs again today, what a game and performance #Diwali #TeamIndia #T20WC2022
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை ட்விட்டரில் ஒன்று தெரிவித்திருந்தார். அதில் அவர் பதிவிட்டது, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் எனவும் நான் நேற்றைய போட்டியின் கடைசி 3 ஓவர்களை பார்த்து இன்றைய தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன் என தெரிவித்திருந்தார்.
மேலும், கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சுந்தர் பிச்சையிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்டிருந்தார். அதற்கு சுந்தர் பிச்சை, சுவையான பதிலடி கொடுத்தது, இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்திருக்கிறது. கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கூறியிருந்ததாவது, ”நீங்கள் மூன்று ஓவர்களை பார்க்க வேண்டும்” என இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழந்ததை மேற்கொள்காட்டி பதிவிட்டிருந்தார்.
After many requests received from neighbours I have decided to frame this picture @sundarpichai #PakvsIndia pic.twitter.com/LC3ZCe8i3t
— Muhammad Shahzaib (@Muhamma91436212) October 24, 2022
அதற்கு சுந்தர் பிச்சை, "நான் அதையும் பார்த்தேன். புவனேஷ்வர் குமாரும், அர்ஷதீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசினார்கள்" என பாகிஸ்தான் பேட் செய்த முதல் மூன்று ஓவர்களை குறிப்பிட்டு நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். அவரது பதில், இணையத்தில் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Solar Eclipse: இந்தியாவில் இருந்து கிரகணத்தை எப்போது பார்க்க வேண்டும் தெரியுமா?
T20 Match 2022: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் பார்த்தவர் மாரடைப்பால் மரணம்..! அசாமில் அதிர்ச்சி...