(Source: Poll of Polls)
T20 Match 2022: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் பார்த்தவர் மாரடைப்பால் மரணம்..! அசாமில் அதிர்ச்சி...
T20 Match 2022: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
T20 Match 2022: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம்: ஆஸ்திரேலியா மெல்போர்னில் இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரபப்பட்டது. இந்த போட்டியை பார்க்க அந்த அரங்கிற்கு 150க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
இந்நிலையில், கோகோய்(35) என்பவர் தனது நண்பர்களுடன் டி20 கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்திருந்தார். அப்போது, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த கோகோய் தீடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோகோய் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, கோகோய் நெஞ்சுவலியால் மரணம் அடைந்தார் எனவும், திரையரங்கில் அதிக சத்தம் இருந்ததால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏதோ ஒரு வேளையில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும்போதோ அல்லது விளையாடும்போதோ பலரும் உயிரிழந்துள்ளனர்.
இதைபோன்று சமீபத்தில் கூட, தமிழ்நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கடம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த விமல் ராஜ் என்கிற 21 வயது இளைஞர் சமீபத்தில் கபடி விளையாடிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.
ஒரு அணிக்காக அவர் விளையாடியபோது அவர் ரைடு சென்று திரும்பியபோது எதிர்பாராத விதமாக மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அப்போது அவருடன் விளையாடிய வீரர்கள் மற்றும் அந்த விளையாட்டை ஏற்பாடு செய்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரைப் பற்றி மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் படிக்க
Crime : வயலுக்குச் சென்ற 2 பெண்கள் வெட்டிக்கொலை...! அரியலூரில் கொடூரம்..