தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம்... மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய கரூர் மாவட்ட ஆட்சியர்..!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கரிடம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
1.செல்வன் குகன் கார்த்திகேயன் மாணவன் சிலம்பு போட்டிகளில் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று 12 தங்கம்,3 வெள்ளி, 08 வெண்கலம் போன்ற 23 பதக்கங்களை பெற்று சிலம்பத்தில் பல உலக சாதனைகள் படைத்துள்ளார்.
2. சென்னையில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரி பிரிவில் கபாடி பெண்கள் அணியினர் வெள்ளிப் பதக்கமும், பள்ளிப் பிரிவில் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், பெண்களுக்கான பொதுப் பிரிவு மட்டைப்பந்து போட்டிகளில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்கள்.
3. கேலோ இந்தியா தேனி திருப்பூர் சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர், சீனியர் ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் செல்வி. ஆர். கோபிகா 48 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் எல் .திவானி 70 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம், எஸ். மோனிஷா 70 மேல் கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம், ரகுபதி 81 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம், செல்வி. ச. ஷோபனா. 57 கிலோ எடை பிரிவில் எடை பிரிவில் தங்கம் பெற்றுள்ளார் ஆகியோர் வெற்றி பெற்ற பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார்கள்.
மாவட்ட ஆட்சித்லைவர் தெரிவிக்கையில், லட்சியம் என்பது இருந்தால் வாழ்க்கையில் எந்த உயரத்தை சாதித்தாலும் விளையாட்டுகளால் வரக்கூடிய ஒழுக்கம் வெற்றியைத் தேடி தரும். உண்மையிலேயே நீங்கள் சாதித்து உள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் உங்களுடைய பெற்றோர், ஆசிரியர், மற்றும் பயிற்றுநர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் . உமா சங்கர், பயிற்றுநர்கள் சபரிநாதன் (தடகளம்), மெய்ஞானமூர்த்தி(ஜூடோ) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial