Chess Grandmaster:’செஸ் கிராண்ட் மாஸ்டர்’ ஆனார் தமிழ்நாடு வீரர் பிரணவ் வெங்கடேஷ்!
Chess Grandmaster Pranav Venkatesh:தமிழ்நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெறும் 27ஆவது வீரர் பிரணவ் வெங்கடேஷ்.
சென்னையைச் சேர்ந்த பிரனவ் வெங்கடேஷ் (Pranav Venkatesh), இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட்மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம்.
View this post on Instagram
அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அன்தவகையில், 2500 புள்ளிகளை பெற்று இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ்.
BREAKING!
— Rakesh Kulkarni (@itherocky) August 7, 2022
Pranav V becomes India’s 🇮🇳 latest Grandmaster! 🥳
16-year-old Pranav is India’s 75th Chess Grandmaster! 😍
Historic milestone for @aicfchess just days before India’s 75th Independence Day! ❤️ pic.twitter.com/qToXOdGPur
முன்னதாக 2014ஆம் ஆண்டு தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சாம்பியன் ஆனார் பிரணவ் வெங்கடேஷ்.
தமிழ்நாடு செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் கூடாரமாக விளங்கும் நிலையில் தற்போது பிரணவ் வெங்கடேஷ் இந்த சாதனையைப் புரிந்துள்ளார். ஏற்கெனவே பூபேஷ், பிரக்யானந்தா போன்ற இளம் வீரர்கள் சாதனைபுரிந்துள்ள நிலையில், இவர்களின் வரிசையில் தற்போது இளம் வீரர் பிரணவ் வெங்கடேஷும் தற்போது சாதனை புரிந்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெறும் 27ஆவது வீரர் பிரணவ் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்