பாரா பேட்மின்டன்: 6 தங்கம் வென்ற இந்தியா... ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்கள் தெரியுமா? விவரம் இதோ
பெருவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மின்டன் சர்வதேச போட்டியில் 6 இந்தியர்கள் தங்கம் வென்றனர்.
பெருவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மின்டன் சர்வதேச போட்டியில் 6 இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக 6 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 14 பதக்கங்களை கைப்பற்றினர். சர்வதேச தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சுகந்த் காதம், எஸ்எல்4 பிரிவில் தங்கம் வென்றார்.
அவர் கூறுகையில், "நான் தங்கம் வென்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு எதிர்வரும் ஆண்டு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக, சுகந்த் காதம், சிங்கப்பூரைச் சேர்ந்த சீ ஹியாங் அங்கை 21-14, 21-15 ஆகிய செட் கணக்கில் வீழ்த்தினார்.
14 Medals (6🥇 1🥈 7🥉) for 🇮🇳 at the Peru Para Badminton International 2022 🔥
— SAI Media (@Media_SAI) December 5, 2022
6🥇:
WS SH6 - Nithya Sre
MS SL3 - Nehal Gupta
WS SL3 - Mandeep Kaur
MS SL4 - Sukant Kadam
MD SL3-SL4 - Nehal Gupta & Breno 🇧🇷
WD SL3-SU5 - Parul Parmar & Vaishali Patel pic.twitter.com/r9Yy6YPhEp
இந்த ஆண்டு பாரா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காதம் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மண்தீப் கெளர் ஆகியோர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றனர்.
நித்யா பெரு வீராங்கனை கிலியானா போவ்டா ஃப்ளோர்ஸை 21-6, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மண்தீப், உக்ரைன் வீராங்கனை ஓக்சானாவை 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், நெஹல் இணை வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் பாருல் பார்மர் இணை தங்கம் வென்றது.