PBKS vs CSK: பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்! 220 ரன்கள் எடுக்குமா சென்னை அணி?
PBKS vs CSK IPL 2025: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கம்பேக் கொடுக்குமா என்ற நிலையில் இருக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 220 இலக்காக உள்ளது.
சென்னை - பஞ்சாப் போட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களை சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர். சென்னை, மும்பை அணியின் கிரிக்கெட் போட்டி என்றால் ரசிகர்களுக்கு குஷிதான். சென்னை அணி ஒரு போட்டியை தவிர விளையாடிய மற்ற போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது. சென்னை அணி மீண்டும் வெற்றி பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
22-வது லீக் போட்டி
இந்தத் தொடரின் 22-வது லீக் போட்டி, பஞ்சாப் சண்டிகர் பகுதியில் உள்ள Maharaja Yadavindra Singh International கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியை ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
சென்னை அணியில் அபார பந்து வீச்சு
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரியான்ஷ் ஆர்யா, பிரம்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக தொடங்கினர். சென்னை பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நன்றாக பந்துவீச முயற்சி செய்தனர். முதல் ஓவரிலேயே ஒரு கேட்சை கலீல் மிஸ் செய்துவிட்டார். அதன்பின்னர் பஞ்சாப் அணி 17 ரன் எடுத்திருந்தபோது பிரம்சிம்ரன் சிங் அவுட் ஆனார்.ஸ்ரேயஸ் அயர் 9 ரன்னிலும் மார்கஸ் ஸ்டோய்னிக்ஸ் 4 ரன்னிலும் அவுட் ஆகினர். வதேராவும் 9 ரன்னில், மேக்ஸ்வெல் 1 ஆட்டம் இழத்தனர். இப்படி பஞ்சாப் அணியின் நான்கு வீரர்களை சென்னை அணி பந்துவீச்சாளர்கள் ஒரு இலக்க ரன்னில் பெவிலியன் அனுப்பினர். இருந்தாலும், மறுபுறம் ஆர்யா அதிரடியாக விளையாடினார். பஞ்சாப் அணி 83 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
பஞ்சாப் அணியின் அதிரடி பேட்டிங்
பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்வ்யா 103 ரன்கள், ஷஹாங் சிங் 52 ரன், மார்கோ ஜேசன் 34 ரன் எடுத்தனர்.ஷஷாங்க் சிங், மார்கோ யான்சன், இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை சீர்ப்படுத்த முயற்சி செய்தபோது அது அவர்களின் நிதானமான ஆட்டத்தை பாதிக்கவில்லை. 200 ரன் கடந்தனர்.
பிரியான்ஷ் ஆர்யாஅதிரடி சதம்
பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா 42 பந்தில் 103 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 9 சிக்ஸர்கள், 7 பவுண்ட்ரிகள் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன், 2010ம் ஆண்டில் யூசுஃப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
What a change-over mama! 🙌🦁#PBKSvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/gpmElf7PDV
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2025
ஐ.பி.எல். 2025 தொடர் இரண்டாவது சதம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் பிரியான்ஷ் ஆர்யாவுடையது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இசான் கிஷான் சதம் அடித்தார்.
சென்னை அணியில் கலீல் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் முகேஷ் செளத்ரி, நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.அஸ்வின் 4 ஓவர்களில் 2 விகெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்தவர் பட்டியலில் 185 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்தது. சென்னை அணி கடந்த ஐந்து ஆண்டுகளாக 180-க்கும் அதிகமான ரன்களை Chase செய்து வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி வெற்றி பெற 220 ரன்கள் தேவை!

