ஐபிஎல் ஓய்வு குறித்து தோனி சொன்னது என்ன?

Published by: ஜான்சி ராணி

ஐ.பி.எல். 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாட வில்லை அதோடு, எம்.எஸ். தோனியின் பேட்டிங்கில் ஃபாமில் இல்லாதது பேசுபொருளாகியுள்ளது.

சென்னை அணியின் பேட்டிங்க் ஆர்டர் சரியில்லை என்றாலும் தோனி ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடுவது நல்லது என்று ரசிகர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.

ஒருசிலர் தோனி போட்டியில் ரன் எடுக்கவில்லையென்றாலும் மைதானத்திற்கு வந்தாலே போதும் என்ற அளவிற்கு பேசுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தோனி உடல்ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தோனி ஓய்வு பெறவில்லை என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்தார். அது குறித்து இப்போதெல்லாம் அவரிடம் கேட்பது கூட இல்லை, ஏனெனில் அவர் வலுவாக ஆடி வருகிறார் என பிளெமிங் சொல்லி இருந்தார்.

தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தோனி ஓய்வு குறித்து சமீபத்திய வெளியான பாட்காஸ்ட்டில் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

“இப்போது நான் ஓய்வு பெறவில்லை. நான் ஐபிஎல் விளையாடுகிறேன். எனது திட்டங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டும்தான் அதை தீர்மானிப்பேன். இப்போது எனக்கு 43 வயது ஆகிறது. இந்த சீசன் முடிந்த பிறகு ஜூலை மாதம் வந்தால் 44 வயதை எட்டுவேன்.

நம்மால் முடியும் அல்லது முடியாது என்று உடல்தான் சொல்லும். என்னவென்று அப்போது பாக்கலாம்.” என தோனி அதில் தெரிவித்துள்ளதாக தகவல்.

43 வயதான தோனி இதுவரை 268 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 319 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும்.