மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

தேசிய போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை

தேசிய போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்று சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கோவாவில் நடைபெற்ற 37 -வது தேசிய விளையாட்டுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட போல் வால்ட் வீராங்கனை பரணிகா தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உயரிய போட்டியான தேசிய விளையாட்டுப் போட்டியின் 37 -வது போட்டி கோவாவில் உள்ள பேம்புலிம் ஸ்டேடியத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் விண்ணப்பித்து, அதில் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் மூலமாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் 26 வயதான பரணிகா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தேசிய போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை

அவர் 3.90 மீட்டர் உயரம் தாண்டி இந்த வெற்றியை பெற்றார். இவர் ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். வெற்றி பெற்ற பரணிகாவுக்கு பயிற்சியாளர் மில்பர், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். பரணிகா ஏற்கெனவே தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61 -வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( இன்டர் - ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022 ) ஜூன் 10 -ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போல் வால்ட் எனப்படும், கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில், 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார். 

Madras High Court: நீட் தேர்வை எதிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

தேசிய போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை

தற்போது மீண்டும் தங்கம் பதக்கம் வென்று சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு பெற்றோர் மற்றும் கிராமமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குத்தாலம் பழையகூடலூர் ஜி.எஸ்.கே.மெட்ரிக் பள்ளியில் படித்தபோதே  ஓட்டப்பந்தயம், தூரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பரணிகா பெற்றுள்ளார். பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் எம்.காம் பயின்றுகொண்டே போல்வால்ட் கோச் மில்பர் என்பவரிடம் பயிற்சி பெற்ற பரணிகா தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது விளையாட்டுத்துறையில் படைத்த சாதனைகள் காரணமாக ரயில்வே துறையில் சென்னையில் எழுத்தர் பணி கிடைத்து அங்கு பணியாற்றி வருகிறார்.

Kodo Millet Upma : சத்தான சுவையான வரகரிசி உப்புமா.. எவ்வளவு நல்லது தெரியுமா? எப்படி செய்வதென்று பார்க்கலாம்...

தேசிய போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை

ஆசிய அளவில் நடைபெறவுள்ள  போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தன்னுடைய ஆசை என்றும், அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு உள்ளதாகவும் கூறும் பரணிகா, சென்னையில் ஜூன் 10 -இல் நடைபெற்ற போல் வால்ட் போட்டியில் போட்டிக்கு பயன்படுத்திய போல் பிளக்ஸிபிளிட்டி குறைந்த காரணத்தால், 4.05 மீட்டர் தூரத்தைவிட அதிக உயரம் தாண்ட முடியாமல் போனதாகவும், தங்களைப் போன்றோருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் உதவி செய்தால் இன்னும் மேன்மேலும் பல சாதனைகளை படைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rathna kumar: 'லியோ’ விழாவில் சர்ச்சை பேச்சு.. வச்சு செய்த நெட்டிசன்கள்.. சோசியல் மீடியாவுக்கு டாட்டா காட்டிய ரத்னகுமார்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget