மேலும் அறிய
Advertisement
Madurai ; உலக யூத் பிரேக் டான்ஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பங்கேற்று அசத்தல் !
ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் தமிழ்நாட்டிற்கு எங்களது கோரிக்கையை கொடுத்துள்ளோம்.
டான்ஸை ஸ்போர்ட்ஸ் ஆக பாருங்கள் இந்தியா சார்பில் சீனாவில் நடைபெற்ற உலக யூத் பிரேக் டான்ஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பங்கேற்று அசத்தல். - தங்களுக்கு விளையாட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை.
ஒலிம்பிக் போட்டியில் பிரேக்டான்ஸ் இணைக்கப்பட்டது
பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், கூடுதல் செயல்பாடாக இருந்துவந்த நடனக் கலையில் ஒன்றான பிரேக் டான்ஸ் (BREAK DANCE) தற்போது விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு, இந்தாண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பிரேக்டான்ஸ் இணைக்கப்பட்டு B BOY, B GIRL பிரிவில் 32 நாடுகள் வரை பங்கேற்றது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், தமிழகத்தில் இதற்கான ஆர்வம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது இந்த பிரேக்டான்ஸ்-ஐ அடுத்தகட்டமாக எடுத்து செல்ல தமிழ்நாட்டின் அங்கீகாரத்துடன் தமிழ்நாடு அனைத்து நடன விளையாட்டு சங்கம், அமெச்சூர் டான்ஸ் ஸ்போர்ட் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து, மதுரை மாவட்டம் அனைத்து நடன விளையாட்டு சங்கத்தை இன்று தொடங்கியுள்ளனர். இதன் மூலம் இந்த விளையாட்டு போட்டியை உலகளவில் எடுத்து செல்ல முன்னேற்பாடாக தமிழ்நாடு அளவில், தேசிய அளவில் போட்டிகள் வைத்து ரேங்க் அடிப்படையில் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மூலம் இந்தியாவிற்கு அடையாளத்தை தேடி கொடுத்தனர்
மதுரை மாவட்ட அனைத்து நடன விளையாட்டு சங்கம் சார்பிலும், தமிழ்நாடு அனைத்து நடன விளையாட்டு சங்கம் சார்பிலும் 4-வது மாநில நடன விளையாட்டு சாம்பியன்ஷிப் மற்றும் 1-வது மாநில பிரேக்கிங் சாம்பியன்ஷிபிற்கான போட்டிகள் வருகின்ற ஜனவரி 4, 5ம் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக இளைஞர் பிரேக்கிங் சம்பியன்ஷிப் போட்டிக்காக இந்தியா சார்பில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் தமிழ்நாட்டில் மதுரையை சேர்ந்த பிரேம் காந்தி, ஆராதன என்ற இருவர் சென்னையில் நடைபெற்ற பிரேக்டான்ஸ் போட்டியில் 8 ரேங்கிற்குள் வந்ததால் சீனாவின் நடைபெற்ற உலக யூத் பிரேக் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்றதன் மூலம் இந்தியாவிற்கு அடையாளத்தை தேடி கொடுத்தனர்.
டான்ஸ்-ஐ விளையாட்டாக பாருங்கள்
மேலும், இந்த பிரேக்கிங்டான்ஸ் விளையாட்டு போட்டிகள் மூலம் தமிழக விளையாட்டு வீரர்கள் அதிகளவு தேர்வு செய்யப்படுவார்கள். இதன் மூலம் தமிழக விளையாட்டு துறையின் மூலம் உயர்கல்வி, அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என அதிகளவு முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது. பெற்றோர்கள் டான்ஸ்-ஐ பொழுதுபோக்கு நிகழ்வாக பார்க்காமல் ஒரு விளையாட்டாக பாருங்கள் என தெரிவித்தனர். ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் தமிழ்நாட்டிற்க்கு எங்களது கோரிக்கையை கொடுத்துள்ளோம். எங்களது கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்தால் இது போன்ற ஏழை எளிய வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Mohan G : ஆல் ஓவர் கவர் பண்ணிட்டாப்ல.. தேர்தலுக்கு I Am Waiting...தவெக தலைவர் விஜய் பற்றி மோகன் ஜி
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion