மேலும் அறிய

ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?

விசிக தலைவர் திருமாவளவனும், த. வெ. க தலைவர் விஜய்யும் வருகிற டிசம்பர் ஆறாம் தேதி ஒரே மேடையில், ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேச உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது..

தமிழ்நாட்டின் அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் இவரது பேச்சு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் உண்டாக்கியுள்ளது.

ஒரே மேடையில் விஜய் - திருமா:

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளதாகவும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட, அதனை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெற்றுக் கொள்வார் என்ற தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை ஒரே மேடையில் திருமாவளவனும், விஜய்யும் பங்கேற்றால், திமுக தலைமை அதை எவ்வாறு கையாளும் என்ற கேள்வி ஓங்கி நிற்கிறது. அண்மையில் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பேசிய விஜய், விசிகவின் முக்கிய அஜெண்டாவான ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். மேலும் திராவிட மாடல் அரசு என்று பெருமையாக சொல்லும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். 

விசிக - தவெக கூட்டணியா?

இதனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யும் திருமாவளவனின் கைகோர்ப்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் உடனடியாக திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்த திருமாவளவன், எடுத்த எடுப்பிலேயே 30% வாக்குகளை விஜயால் வாங்கி விட முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுக காரர், தேர்தல் அனுபவம் உள்ளவர் என்று சொல்லி, நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று முற்றுப்புள்ளி வைத்தார். 

எனினும் திமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை விஜய்யும் பேசியதால், உண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே என்ன நடக்கிறது என்று உளவுத்துறையை ரிப்போர்ட் கொடுக்குமாறு திமுக தலைமை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 புத்தக வெளியீடு ஏன்?

அதன் அடிப்படையிலேயே விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் ஒன்றாக சந்திப்பதற்காகவே, அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றை ஆதவ் அர்ஜுனா எழுதி வெளியிடும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

உளவுத்துறை தொடர்ந்து இவர்களின் மூவ்மெண்ட்டை கண்காணித்து வரும் நிலையில், தனிப்பட்ட முறைக்கு எங்கு சந்தித்தாலும் அது தேவையில்லாத அதிர்வலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும், அதே நேரம் புத்தக வெளியீட்டு விழா என்றால் அதை அரசியல் ரீதியிலான சந்திப்பாக பார்க்க வேண்டாம் என்று கவுண்டர் செய்யலாம், என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உடைகிறதா தி.மு.க. கூட்டணி?

இது அனைத்திற்கு பின்னணிகளும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாஸ்டர் மைண்ட் இருப்பதாகவும், திருமாவளவன் மற்றும் விஜய் ஆகிய இருவரிடமும் இது குறித்து தெரிவித்து ஒப்புதல் பெற்று தொலைபேசியில் அவர்கள் இருவரையும் அர்ஜுனா பேச வைத்துள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கூட்டணியில் விரிசல் விடாமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் இன்று திமுக திட்டமிட்டு வரும் நிலையில், இந்த தகவல்கள் அனைத்துமே திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் ஆறாம் தேதி வெளியாகி வரும் தகவலின் படி உண்மைகள் விஜயும் திருமாவளவன் ஒரே மேடையில் சந்தித்தால், விசிக தரப்பில் இருந்து என்ன காரணம் தெரிவித்தாலும் அரசியல் களத்தில் அது புயலை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget