மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Thiruparankundram: கந்த சஷ்டி விழா... திருப்பரங்குன்றத்தில் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சி
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி ஆறு நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
முருகனின் முதல்படை வீடு
Thiruparankundram: 'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்' - என்பார்கள். முருகனின் முதல்படை வீடே பெரிய குன்றாக தான் இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம், மதுரை நகர் பகுதியில் இருந்து சற்று ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கந்த சஷ்டி விழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். வருகிற 7-ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினார்
முன்னதாக உற்சவமூர்த்தி களான சுப்பிரமணிய சுவாமி சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், சீயக்காய், தயிர். பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோயில் யாகசாலை மண்டபத்தில் புனித நீர் வைக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமி - தெய்வானைக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியம் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முக நாதருக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கோயில் சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி ஆறு நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
கோயிலில் திருமணம் செய்து கொள்ள அறிவிப்பு
அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்கும் விழா வருகிற 6ம் தேதியும் உச்ச நிகழ்ச்சியான சூரசம்கார நிகழ்வு 7ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற ஏழாம் தேதி எட்டாம் தேதி ஆகிய இரு தினங்கள் முகூர்த்த தினங்கள் என்பதால் அன்றைய தினம் திருமணம் செய்து கொள்ள பதிவு செய்துள்ள புதுமண தம்பதிகள் கோயில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயிலில் திருமணம் செய்து கொள்ள கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Mohan G : ஆல் ஓவர் கவர் பண்ணிட்டாப்ல.. தேர்தலுக்கு I Am Waiting...தவெக தலைவர் விஜய் பற்றி மோகன் ஜி
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion