Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். அவரது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்த ரேஸ் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.
நடிக்க மாட்டேன் என்று சொன்ன அஜித்:
இந்த நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அஜித் கார் ரேஸின் போது ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, பேசிய அஜித், "செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை நான் எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் மேலும், "18 வயதில் கார் பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அதன்பின்பு, சினிமாவில் நடித்து வந்ததால் பங்கேற்கவில்லை. 2010ம் ஆண்டு யூரோப்பியன் 2 பந்தயத்தில் பங்கேற்க களமிறங்கினேன். ஆனால், பங்கேற்க முடியவில்லை. தற்போது ரேஸிங் தொடருக்கு ஒரு உரிமையாளராக வந்துள்ளேன்" என்றும் கூறியுள்ளார்.
அஜித் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் கே.ஜி.எஃப். படத்தின் இயக்குனர் இயக்கத்தில் படம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம் வரை நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தாண்டு 2 படங்கள் ரிலீஸ்:
இந்தாண்டின் பெரும்பகுதி அவர் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தாலும், அவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு படங்களும் இந்தாண்டு ரிலீசாக உள்ளது. குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி சித்திரைத் திருநாள் கொண்டாட்டமாக வெளியாகிறது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒத்திவைக்கப்பட்டது. அஜித் நடித்த விடாமுயற்சி படம் வரும் 23ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே கார் மற்றும் பைக் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். தனது கார் மற்றும் பைக் பந்தயங்களில் தேவைப்படும் பணத்திற்காகவே அவர் மாடலிங் துறைக்குள் வந்தார். பின்னாளில், திரைத்துறையில் அவருக்கு கிடைத்த அமோக வரேவற்பு அவரை திரையுலகில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அமராவதி படம் மூலமாக நாயகனாக அறிமுகமான அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.