Mohan G : ஆல் ஓவர் கவர் பண்ணிட்டாப்ல.. தேர்தலுக்கு I Am Waiting...தவெக தலைவர் விஜய் பற்றி மோகன் ஜி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி விஜய் பற்றி பதிவிட்டுள்ளார்

தவெக விஜய்
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. மாநாடு முடிந்து சில நாட்கள் கடந்துள்ள நிலையிலும் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் இந்த மாநாட்டைப் பற்றிதான் விவாதிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாநாட்டில் விஜயின் கருத்துக்கள் ஒரே நேரத்தில் எதிர்கட்சிகளின் ஆதரவையும் ஆளும் கட்சியின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. திராவிட மாடல் என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும் அரசு தான் தன் கட்சியின் முதல் எதிரி என விஜய் நேரடியாக திமுகவை விமர்சித்தது தான் இந்த மாநாட்டில் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது . ஆளும் கட்சியான திமுகவை விஜய் நேரடியாக எதிர்க்கும் நிலையில் அவர் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பது விவாதப் பொருளாகியுள்ளது. அரசியல் களத்தில் இந்த நிலை என்றால் திரைத்துறையை சேர்ந்தவர்களில் பலர் விஜய்க்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது மோகன் ஜி விஜய் பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் பற்றி மோகன் ஜி
இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் தனது தவெக அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இதனை சுட்டிக்காட்டிய மோகன் ஜி இப்படி கூறியுள்ளார் " எம் ஜி ஆர் அவர்கள் சென்ற அதே பாதை.. இன்னும் கொங்கு பகுதி தான் மிச்சம்.. ஆல் ஓவர் கவர் பண்ணிட்டாப்ல.. 2026 அவ்வளவு சுலபமான தேர்தல் இல்லன்னு மட்டும் தெரியுது.. ஐ அம் வெயிட்ங்.."
எம் ஜி ஆர் அவர்கள் சென்ற அதே பாதை.. இன்னும் கொங்கு பகுதி தான் மிச்சம்.. ஆல் ஓவர் கவர் பண்ணிட்டாப்ல.. 2026 அவ்வளவு சுலபமான தேர்தல் இல்லன்னு மட்டும் தெரியுது.. ஐ அம் வெயிட்ங்.. https://t.co/npCGd4UvH4
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 30, 2024
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

