‛டென்னிஸில் நான் பெற்ற ஆதாயம் இது தான்...’ வீதியில் கிறிஸ்துமஸ் கொண்டாடி நினைவுகள் பகிர்ந்த லியாண்டர் பயஸ்!
"நட்புக்களான பீட் சாம்ப்ராஸ், ஆண்ட்ரே அகாஸ்ஸி, மார்டினா நவ்ரதிலோவா, மார்டினா ஹிங்கிஸ்... பீலே மற்றும் 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் நட்பு கூட விளையாட்டின் மூலம் எனக்கு கிடைத்த ஆதாயங்கள் தான்"
லியாண்டர் பயஸ் கொல்கத்தாவின் பார்க் தெருவை ரசித்து சுற்றித்திரிகையில், செல்ஃபி கேட்கும் அனைவருக்கும் புன்னகையோடு இசைந்து கொடுத்து வலம் வந்தார். அவரோடு நடந்து சென்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சிறப்பு பேட்டி ஒன்றை எடுத்துள்ளது. தனது சிறந்த விளையாட்டு நினைவுகளையும் தந்தை வெஸ் பயஸ் உடனான பந்தத்தையும் குறித்தும் அப்போது பகிர்ந்துகொண்டார். இதனிடையில் கஃபேவில் பணிபுரிபவர்களை அன்பான புன்னகையுடன் வரவேற்றார், வெளியே பரபரப்பான நடைபாதையில் சாண்டா தொப்பிகளை தலையில் அணிந்து பார்த்தார், அப்படியே கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். இதோ அவரது பேட்டி:
கிறிஸ்துமஸுக்கு உங்கள் சொந்த ஊரான கொல்கத்தாவுக்குச் வந்தது எப்படி இருக்கிறது?
ஆகா, வீட்டிற்குத் திரும்புவது அவ்வளவு அழகு! நான் பார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள குயின்ஸ் மேன்ஷனில்தான் வளர்ந்தேன். இந்த இடம் கிறிஸ்துமஸின் ஆரவாரம் மட்டுமல்ல, எனது இளமையும் பற்றியது. இங்குள்ள உணவகங்கள் எனக்குத் தெரியும், நான் இங்கு வரும்போதெல்லாம் நான் அமர்ந்திருக்கும் இடத்தில் எனக்குப் பிடித்தமான டேபிள் உள்ளது, கொல்கத்தா தெருக்களில் விளையாடி வளர்ந்தவர்களால் நடத்தப்படும் சில கடைகளின் உரிமையாளர்களை நான் நன்கு அறிவேன். மீண்டும் என் குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்கிறது இது. கொல்கத்தாவில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது நமது பெங்காலி பாரம்பரியம், நம்பிக்கை, சமூக உணர்வு, கலாச்சாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவு. கொல்கத்தாவைப் பற்றிய மிக அழகான விஷயங்களில் ஒன்று இது - நீங்கள் எந்த மதம், சமூகத்தின் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த மொழி என்பது முக்கியமல்ல, இங்கு, மக்கள், ஒரு சமூகமாக ஒன்று கூடுகிறார்கள். நான் இங்கு வளர்க்கப்பட்டதை எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக எண்ணுகிறேன், ஏனென்றால் நான் டென்னிஸ் விளையாட்டுக்காக உலகத்தை சுற்றி வந்தபோது, ஏற்கனவே இந்த பன்முக கலாச்சார தன்மைக்கு பழகியிருந்தேன்.
View this post on Instagram
1996 இல் அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த தருணத்தை எப்படி திரும்பிப் பார்க்கிறீர்கள்?
அட்லாண்டாவில் அந்த மேடையில் நிற்கும் ஒரு இந்தியனாக நான் ஒருபோதும் பெருமைப்பட்டதில்லை. தங்கம் வென்ற ஆண்ட்ரே அகாஸ்ஸி அமெரிக்கக் கொடியுடன் என் வலதுபுறமும், வெள்ளி வென்ற செர்ஜி ப்ருகுவேரா ஸ்பானிஷ் கொடியுடன் அவருக்கு வலதுபுறம் இருந்தார். காவி, வெள்ளை, பச்சை கலந்த வெள்ளை சட்டை அணிந்து நான் நின்றிருந்தேன். இது சிறுவயது கனவு நனவாகும் அற்புதமான தருணமாகும். சிறுவயதில், நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்கு சென்று வந்த பிறகு எனது தந்தையின் பதக்கங்களை துடைத்து வைப்பேன். அவருக்கு மிகவும் மதிப்புமிக்க பதக்கம் எது என்று தெரியும் (வெஸ் பயஸ் 1972 முனிச் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்றார். லோகோவில் அந்த ஐந்து ஒலிம்பிக் ரிங்குகள் எதைக் குறிக்கின்றன என்பது குறித்தும், வண்ணங்களின் முக்கியத்துவத்தை குறித்தும் அவர் எனக்கு விளக்குவார். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் சாம்பியன்கள் மனித மனம் எதைப் பற்றியது என்பதை சுருக்கமாகக் கூறுகின்றனர்.
View this post on Instagram
நீங்கள் விளையாட்டு சமூகத்திற்காகவும் உழைத்திருக்கிறீர்கள் அல்லவா...
சமூகத்திற்குள் நுழைவதற்கும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் விளையாட்டை ஒரு வாகனமாக பயன்படுத்துவது எனது பொறுப்பாக நான் கருதுகிறேன். விளையாட்டுக் கல்வி, விளையாட்டு மருத்துவம், கல்லூரியில் விளையாட்டு அல்லது கார்ப்பரேட் செயல்பாடு என எதுவாக இருந்தாலும், கிராமப்புறங்களுக்குச் சென்றாலும் அல்லது பெருநகரங்களுக்குச் சென்றாலும் - விளையாட்டின் மூலம் மனித திறன்களை கற்பிக்க முடியும்.
உங்களின் திரைப்பட அனுபவங்கள்பற்றி எங்களிடம் கூறுங்கள்.
இரண்டு படங்களில் பணியாற்றினேன். ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மற்றும் பிரேக்பாயிண்ட் எனும் ஒரு ஆவணப்படம். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பின் போது, ஒரு திரைப்பட உருவாக்கம் எப்படி இத்தனை பேருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குகிறது என்பதை உணர்ந்தேன். விளையாட்டிலும் இதேதான் நடக்கும். கிரிக்கெட் மற்றும் கால்பந்து லீக்குகள், டென்னிஸ், கூடைப்பந்து, ஹாக்கி மற்றும் மற்ற அனைத்து விளையாட்டுகளும் விளையாட்டு மேலாண்மை, அறிவியல், கல்வி, உளவியல், உணவுமுறை ஆகியவற்றில் கிட்டத்தட்ட 20 மில்லியன் வேலைகளை உருவாக்குகின்றன. எனது இரண்டாவது, மகேஷ் பூபதியுடன் எனது பயணம் பற்றிய ஆவணப்படத் தொடரில், இரண்டு இந்தியச் சிறுவர்கள் எப்படி ஒரு பயணத்தைத் தொடங்கி வெற்றி பெற்றனர் என்று விரிவாக கூறியிருப்பார்கள். எங்கள் நட்பு மற்றும் அதன் நுணுக்கங்களைப் பற்றி நாங்கள் மிகவும் கடினமான கதைகளைச் சொன்னோம். நாம் செய்யும் அனைத்தும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்.
முப்பது வருட கால டென்னிஸ் வாழ்வில், மிகவும் பொன்னான தருணங்கள் யாவை?
எனது இனிய நினைவுகளில் ஒன்று கொல்கத்தாவில் விளையாடியது. தேசபக்தி, தலைமைத்துவம் மற்றும் குழுப்பணி என்ன என்பதை எனது தந்தையின் வாழ்க்கையின் மூலம் நான் புரிந்துகொண்டேன். தந்தை ஒரு தடகள வீரராகவும், சாம்பியனாகவும் மட்டுமல்லாமல், ஒரு மருத்துவராகவும் தனித்துவமானவர். கொல்கத்தாவில், நிறைய நல்ல உள்ளங்கள் உள்ளன, வளர்ந்து வரும் போது என் தந்தையின் கண்களால் அதனை இங்கே கற்றுக்கொண்டேன். விளையாட்டு மூலம் நான் பெற்ற நட்புகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஆதாயங்கள். பீட் சாம்ப்ராஸ், ஆண்ட்ரே அகாஸ்ஸி, மார்டினா நவ்ரத்திலோவா, மார்டினா ஹிங்கிஸ், பியோர்ன் போர்க். பீலே மற்றும் 1963 கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன் அணியும் கூட இதில் அடங்கும். நான் வாஷிங்டன் காஸ்டில்ஸ் அணிக்காக விளையாடியபோது அமெரிக்க அதிபர் ஒபாமா மிகவும் அன்பான நண்பரானார். அவரது மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் இரண்டு மகள்கள் தினமும் போட்டிகளைக் காண வருவார்கள். உலகம் முழுவதும் பயணம் செய்து பிரதமர்கள், ஜனாதிபதிகள், அரச குடும்பங்களைச் சந்திக்க முடியும், மேலும் வாழ்க்கையின் சாம்பியன்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு நபருக்குள்ளும் ஒரு சாம்பியன் இருப்பதாக நான் நம்புகிறேன்.
விளையாட்டில் பாலின சமத்துவத்தைக் கொண்டுவர இந்தியாவில் போதுமான அளவு முயற்சிகள் எடுக்கப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
பெண்கள் அதிகாரம், சம வாய்ப்பு மற்றும் உரிமைகளில் நான் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளேன், பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான பரிசுத் தொகையைக் கொண்ட உலகின் ஒரே விளையாட்டு டென்னிஸ் மட்டுமே. என் வாழ்நாள் முழுவதும் நான் வாழ்ந்த விளையாட்டு, டென்னிஸுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருபாலருக்கும் சமமான உதவித்தொகையை வழங்குகிறது. இது மனித சமத்துவத்தை நிலைநிறுத்துகிறது. அதனால்தான் நான் டென்னிஸ் வீரர் என்பதில் பெருமை கொள்கிறேன்.